பெருநாள் தினத்தின் கடமைகள்..?


இஸ்லாத்தில் இரு பெருநாட்களில் நோன்பு பெருநாளும் ஒன்று. இரு பெருநாள் தினத்திலும் மகிழ்ச்சியுடன் இருக்க இறைவன் வழி செய்துள்ளான்.

பெருநாள் தினத்தில் முக்கியமாக கீழ்கண்டவற்றைக் கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் தெளிவுபத்தியுள்ளது.

* தக்பீர் சொல்லுதல்.. பிறை தென்பட்டது முதல் பெருநாள் தொழுகை வரை உள்ள நேரங்களில் அதிகமாக தக்பீர் சொல்வது சுன்னத்தாகும். 

* இரு பெருநாள் இரவுகளிலும் அதிக நன்மையான செயல்களில் ஈடுபடுதல் வேண்டும். குர்ஆன் ஓதுதல். திக்ர் செய்தல் போன்றவை.

* குளித்து சுத்தமாகி கொள்ளுதல்
( நிய்யத் அவசியம் ஈதுல் பித்ர் தன்னத்தான குளியளை நிறைவேற்றுகிறேன் ).

* புத்தாடை அணிதல் புத்தாடை இல்லாவிட்டால் சுத்தமான அழகிய ஆடையை அணிதல்,

* ஆண்கள் மணம் பூசுதல் வெளியில் செல்லாத பெண்கள் மணம் பூசுதல்.

* இயன்றவரை அதிகமாக தர்மம் செய்தல்.

* ஸதகத்துல் ஃபித்ர் கொடுத்தல்.

* பெருநாள் தொழுகையிலும் குத்பாவிலும் கலந்து கொள்ளுதல்.

இந்த எட்டு காரியங்களில் ஸதக்கதுல் ஃபித்ர் கட்டாயக் கடமையானது - ஏனைய அனைத்தும் சுன்னத்தாகும்.

கடமையான ஃபித்ரா:

தாம் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களையே பெருநாள் ஃபித்ரா தர்மமாக கொடுக்க வேண்டும்.

யாருக்கு ஃபித்ரா கொடுக்கக் கூடாது:-

ஃபித்ரா தர்மத்தை தனது பொறுப்பில் உள்ளவர்களான 
தாய், தந்தை, பாட்டன், பாட்டி, மகன்பேரன், மனைவி
ஆகியோருக்கு கொடுக்க முடியாது.
அவர்கள் உங்களது பொறுப்பிலிருப்பதால் அவர்களுக்காகவும் நீங்கள் ஃபித்ரா கொடுக்க வேண்டும் .மற்ற உறவினர்களில் ஏழை எளியவர்கள் இருந்தால் அவர்களுக்கு முதலிடமளித்து ஃபித்ரா கொடுக்க வேண்டும்.

வெளியூர்களில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு ஒரிரு நாட்கள் முன்பாகவே அனுப்புவதை இஸ்லாம் அனுமதிக்கிறது.

தகவல் : Wikipedia
by. K.A

Post a Comment

Previous Post Next Post