நம் இல்லங்களில் பெரும்பாலானோர் தண்ணீரை பிலாஸ்டிக் குடத்தில் சேமித்து வைப்பதும் பிலாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. எங்கு பார்த்தாலும் பிலாஸ்டிக்கின் ஆதிக்கம் இதனை தவிற்ப்பது மிகவும் நல்லது.
ஒருவர் சாப்பிடாமல் சராசரியாக 10 நாட்களுக்கு மேல் உயிர் வாழமுடியும்
ஆனால் தண்ணீர் இல்லாமல் மூன்று முதல் 5 நாட்கள் தான் இருக்க முடியும் எனவே தண்ணீர் அவசியமானவை அதுவே நமக்கு தீங்காக இருந்து விட கூடாது.
ஆனால் தண்ணீர் இல்லாமல் மூன்று முதல் 5 நாட்கள் தான் இருக்க முடியும் எனவே தண்ணீர் அவசியமானவை அதுவே நமக்கு தீங்காக இருந்து விட கூடாது.
பிலாஸ்டிக்கில் இருக்கும் நச்சுப் பொருள் நீரில் கலந்து உடலில் சேர்ந்து புற்றுநோய் ,கல்லீரல் பிரச்சனை ,சிறுநீரக பிரச்சனைகளை எற்படுத்தும்.
பிலாஸ்டிக் நீருடன் வெயிளில் இருக்கும் போது பிலாஸ்டிக்கில் இருக்கும் தாலேட் என்ற வேதிப்பொருள் நீருடன் கலந்துவிட வாய்புள்ளது.
தவிற்ப்பது எப்படி:-
தண்ணீரை சுத்திகரிக்கும் மண்பானை:-
* மண்பானையில் குடி தண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண்பானை உறிஞ்சி விடும்.
* மண் பானையில் தண்ணீர் வைத்து குடித்தால் எந்தவித ஆபத்தும் இல்லாமல் நன்மை தரும் நீரகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும் .எனவே பிளாஸ்டிக் குடங்களை தவிர்த்து மண்பானைகளை பயன்படுத்துங்கள்.
செம்பு பாத்திரம்:-
* அறிவியல் ரீதியாக செம்பு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் குடிப்பதால் பல்வேறு உடல் நல நன்மைகளும் உள்ளது என்று கூறுகின்றனர்.
* தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை அழிக்கும் குணத்தை கொண்டது செம்பு. பிலாஸ்டிக் குடத்திற்கு பதில் செம்பு குடங்களை பயன்படுத்தலாம். இதன் மூலம் தீய நோய்கள் நம்மை தாக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.,
மேலும் சில தகவல்கள்:
Tags
பயனுள்ள தகவல்