கண் கருவளையத்தை போக்க இதை செய்திடுங்கள்!


கண்களின் கீழே உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் சேதத்தினால் கண்களின் கிழே உள்ள தோல் கருப்பாக காணப்படுகிறது
இந்த வகை கருவளையங்களை போக்க எழிய இயற்கை முறைகளை இங்கு பார்ப்போம்.

ஐஸ்.

ஐஸ் கட்டியைக் கொண்டு கண்களைச் சுற்றி ஒத்தடம் கொடுத்தால் கண்கள் மிகவும் பாதுகாக்கப்படும்.
சூடான அழுத்ததிணை கொண்டு ஒத்தடம் கொடுத்தால் கண் கருமை நீங்கும்  கண்களுக்கு கீழே ஏற்ப்படும் வீக்கத்தை குறைக்கும். இவ்வாறு கண்களை சுற்றி அடிக்கடி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை.

கற்றாழை அழற்சியை போக்கும் மருத்துவ குணம் கொண்டதாகும்.
கற்றாழையில் உள்ளே உள்ள சதையை கண்களைச் சுற்றியுள்ள சதை பகுதியில் மென்மையாக தடவ வேண்டும், இதை தொடர்ந்து செய்து வந்தால் கருவளையம் குறையும்,

பப்பாளி:-

பப்பாளி  சரும அரோக்கியத்திற்கு சிறந்தது , பப்பாளியை கண்களுக்கு கிழ் உள்ள தோல்களில் தடவிவர கண்களின் கிழ் உள்ள இரத்த நாளங்கள் சரிசெய்யப்பட்டு ,தோலில் ஏற்படும் இரத்தபோக்கு குணமடையும்.

மஞ்சல் தூள்:-

மஞ்சலில் எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன எனவே மஞ்சள் தூளை பசை போல் செய்து சருமத்தின் மேல் தடவ வேண்டும் இதனை தொடர்ந்து செய்து வந்தால் கண்களில் ஏற்படும் கரும் படலம் , அதனால் ஏற்படும் வலி மற்றும் அழற்சி ஆகியவை குணமாகும்,

தேன்:-

நமது சருமத்திற்கு நன்மை செய்யும் அருமருந்து தேன் . தேனில் உள்ள எதிர்ப்பு பண்புகள் வலியையும் அழற்சியையும் குறைக்கும் இரத்தப் போக்கு ஏற்படுத்தும் ரத்த நாளங்களை குணமாக்கும். இதனை கண்களின் தோலின் மீது தடவினால் கருமையை விரைவில் போக்கலாம்.

தேங்காய் எண்ணெய்:-

தேங்காய் எண்ணெயை கண்களின் கீழ் தோல் மீது தடவினால் கண்களின் கருமையை நீக்கும், அத்துடன் கண்களின் கீழ் ஏற்படும் வெடிப்பையும் சரிசெய்து தோலுக்கு ஈர்ப்பதத்தினை தரும் .

தகவல் திரட்டப்பட்டது,
by . K. A

Post a Comment

Previous Post Next Post