பழங்கள் மற்றும் காய்கறிகளை தோலுடன் சாப்பிடலாமா??


நாம் சாப்பிடும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோலில் தான் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. தோலுடன் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டால் தான் அதிலிருக்கும் முழு சத்துக்களையும் நாம் பெற முடியும்.


உருளைக்கிழங்கின் தோலில் தான் ஊட்டச்சத்துகளான
இரும்புச்சத்து,கால்சியம்,பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் பி 6, மற்றும் வைட்டமின் சி . ஆகியவை அதிகம் உள்ளன.


கேரட்டின் தோலில் பாலி அசிட்டலின் என்னும் கெமிக்கல் உள்ளது, அதோடு ஆண்டி பாக்டீரியல் ' அழற்சி எதிப்பு பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவையும்  தோலில் உள்ளது.


கத்தரிக்காயின் தோலில் நாசுனின் என்னும் சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்ஸிடன்ட் உள்ளது . இது நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும் .இதில் ஆண்டி - ஏஜிங் எனும் பண்புகளும் உள்ளன. கத்திரிக்காயின் தோலில் குளோரோஜெனிக் அமிலம் அதிகமாக உள்ளது.


வெள்ளிக்காயின் தோலில் பல்வேறு ஆண்டி ஆக்ஸிடன்டுகள் உள்ளன. இது உடலை பல்வேறு நோய்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கும்.மேலும் வெள்ளரிக்காயில் கரையக்கூடிய நார்சத்து, பொட்டாசியம், மற்றும் வைட்டமின் - ஏ போன்றவையும் உள்ளது.


ஆப்பிள் பழத்தில் தோலில்தான் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது . அதோடு வைட்டமின் - ஏ. பொட்டாசியம் மற்றும் வைட்டமின் - கே. போன்ற சத்துக்கள் இதில் உள்ளன. இவைகள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கின்றன.


மாம்பழத்தின் தோலில் ரெஸ்வெராட்ரோல்  என்னும் கொழுப்பை கரைக்க உதவும் மற்றும் முதிர்ந்த கொழுப்புகளின் வளர்ச்சியினை தடுக்கும் பொருள் உள்ளது. என ஆய்வாளர்கள் கண்டரிந்துள்ளனர்.

மாம்பழத்தின் கனிந்த சதை பகுதியையும் ஆய்வாளர்கள் சோதித்தனர். ஆனால் அதில் இம்மாதிரியான பொருள் ஏதும் இல்லை என கூறுகின்றனர். எனவே மாம்பழத்தின் முழு நன்மையையும் பெற தோலுடன் சாப்பிடுங்கள்.

தகவல் திரட்டப்பட்டது.
by. K.A

Post a Comment

Previous Post Next Post