நாவல்பழத்தின் நன்மை, தீமை!!


நாவல் பழத்தில் வேர் முதல் கொட்டை வரை அத்தனையும் மருத்தாக பயன்படுகிறது.

நாவற்பழம் பல நோய்களுக்கும் சரும பிரச்சனைகளுக்கும் சிறந்தது.
இருப்பினும் நவால் பழத்தை அளவோடு சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் இருமல், தொண்டைக் கட்டுதல் ஆகியவை ஏற்படும்.

பயன்கள்:-

* நாவல்பழக் கொட்டையை வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு தண்ணீர் அல்லது பாலில் கலந்து குடித்து வந்தால் நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம்.

* நாவல் பழம் இயற்கையாகவே இரத்தத்தை சுத்திகரிக்க பயன்படுகிறது.

* இதில் வைட்டமின்-A மற்றும் வைட்டமின்-C அதிக அளவில் உள்ளதால் சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ள உதவுகிநது.

* கண் பார்வை தெளிவாக்கும்.

* ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை மற்றும் தசைகளில் ஏற்படும் எரிச்சல் ஆகிய பிரச்சனைகளுக்கு நாவல் பழம் சாறு பயன்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

* சிறுநீரகக் கற்களை கரைக்கும் சக்தி கொண்டது.

* நாவல் பழ கொட்டையின் பவுடர்ருடன் பால் கலந்து தடவி வந்தால் முகப்பருவை போக்கும்.

* இதன் சாறு நினைவாற்றலை அதிகரிக்கப் பயன்படுகிறது.

* ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்பகிறது.

யார் சாப்பிடக் கூடாது?

* அறுவை சிகிச்சைக்கு போகும் நோயாளிகள் இந்த பழம் சாப்பிடுவதை தவிற்க்க வேண்டும்.

* வெறும் வயிற்றில் நாவல் பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

* பால் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் பின்பும் இந்த பழத்தை சாப்பிடுவதை தவிர்கவும்.

* இந்த பழத்தின் மூலம் ஏற்படும் கரை விரைவில் போதாததால் சாப்பிட்டப் பிறகு பல் துலக்குவது நல்லது.


தகவல் திரட்டப்பட்டது.
by. K.A

1 Comments

Previous Post Next Post