ஒருவரது வாய் சுகாதரம் மோசமாக இருந்தால் பல்வேறு பல் மற்றும் ஈறு பிரச்சனைகள் ஏற்படும்.
பல் அல்லது ஈறுகளின் தொற்றுக்கள் ஏதேனும் ஏற்ப்படிருந்தால் அப்பகுதியில் வீக்கம் மற்றும் ஈறுகளில் கிருமிகள் நிறைந்த திரவம் நிரம்பியிருக்கும்
இதையடுத்து கடுமையான பல் வலி ஏற்படும்.
இதையடுத்து கடுமையான பல் வலி ஏற்படும்.
பெரும்பாலும் பல் வலியானது இரவு நேரத்தில் கடுமையாக இருக்கும் இது போன்ற சமயங்களிள் வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு நிவாரணம் பெறலாம்.
பேக்கிங் சோடா:-
பேக்கிங் சோடா எப்பேற்ப்பட்ட வீக்கத்தில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். ஏனெனில் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
மேலும் இதில் உள்ள ஆண்டி- பாக்டீரியல் பண்புகள் பல் வலியை உண்டாக்கும் தொற்றுக்களை
சரிசெய்யும். நீரில் நனைத்த பஞ்சு உருண்டையை பேக்கிங் சோடாவில் தொட்டு வலியுள்ள இடத்தில் வைத்தால் வலி சரியாகும்.
கிராம்பு எண்ணெய்:-
கிராம்பு எண்ணெயில் உள்ள இயூகினால் என்னும் உட்பொருள் பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். இந்த எண்ணெயை வலியுள்ள பல்லின் மீது தடவி சிறிது நேரம் ஊற வைத்தால் வலி குறையும்.
இஞ்சி:-
இஞ்சி ஈறுகளில் உள்ள வீக்கம் அழற்சி மற்றும் வலி போன்றவற்றை குறைக்கும் திறன் கொண்டதாகும். இஞ்சியை மிளகுத் தூளுடன் சேர்த்து நீர் ஊற்றி பேஸ்ட் கோல் கலந்து வலியுள்ள இடத்தில் வைத்து சில நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால் பல்வலி போய்விடும்.
பூண்டு:-
பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் தொற்றுகளை உண்டாக்கிய கிருமிகளை அழித்து வலியை குறைக்கும். ஆகவே பல்வலி இருந்தால் ஒரு பல் பூண்டு எடுத்து அதனுடன் கல் உப்பு சேத்து தட்டி வலியுள்ள இடத்தில் வைக்கலாம்.
ஆலிவ் ஆயில்:-
ஆலிவ் ஆயிலில் பினோலிக் என்றும் உட்பொருள் உள்ளதால் பல் வலி இருக்கும் போது பஞ்சு உருண்டையில் ஆலிவ் ஆயிலை தொட்டு வைத்தால் வலி சரியாகும்.இப்படி ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை செய்யலாம்.
வெங்காயம்:-
வெங்காயத்திற்கு பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் திறன் உள்ளதோடு வாயில் உள்ள கிருமிகளை அழித்து வலியையும் போக்குகிறது .அதுவும் சின்ன வெங்காயத்தை பல் வலி உள்ள இடத்தில் வைத்து ஒரு நிமிடம் கடித்துக் கொள்ளலாம். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்தால் பல் வலி சரியாகும் .
தகவல் திரட்டப்பட்டது
by .K.A
by .K.A
Tags
உடல்நலம்