இப்புனிதமிகு மாதத்தில் நோன்பு நோற்று இறைவழிபாட்டில் ஈடுபட்டு அருள்மறை குர்ஆனை ஓதி இரவு காலத்தில் நின்று வணங்கி இறைவனிடம் கையேந்தி தூஆ செய்யும்போது அடியாரின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
ரமலான் மாதத்தின் சிறப்புகள்:-
* ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
* நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
* கூடுதல் நன்மைகளை பெற்றுத்தரும் மாதம். மற்ற வணக்கத்தை விடவும் நோன்பிற்கு கூடுதல் நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான்.
* கடந்தகால பாவங்கள் மன்னிக்கப்படுதல் ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நம் செய்த முந்தைய சிறு பாவங்களை அல்லாஹ் மன்னிக்கின்றான்.
* உம்ரா செய்தால் ஹஜ் நன்மை கிடைக்கும். ரமலான் மாதத்தில் உம்ரா செய்தால் ஹஜ் செய்த நன்மையை பெற்றுத்தரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
* அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம் நோன்பு. நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடையமாகும்.
* நோன்பாளியின் வாய்நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்தூரி மனத்தை விட சிறந்ததாகும். என நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
* ஆயிரம் மாதங்களைவிட சிறந்தது, இம்மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ர் எனும் இரவில் செய்யும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தைவிட சிறந்ததாகும்.
* நோன்பாளி நோன்பை திறக்கும்போது கேட்கும் தூஆக்கள் அல்லாஹ்விடத்தில் கபுல்செய்யப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ரமலான் மாதம் பாவமன்னிப்பு வழங்கப்படும் மாதமாகும் எனவே நாமும் நமது குடும்பத்தாரும் அதிகமாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்கவேண்டும்,,,
இந்த மாதத்தின் முழுநன்மைகளையும் நாம் அனைவரும் அடைய அல்லாஹ் உதவிசெய்வானாக... ஆமீன் ஆமீன்.
தகவல் (திரட்டப்பட்டது)
by .K.A
Tags
இஸ்லாமிய குறிப்புகள்