* நோன்பு பெருநாள் தர்மம்:-
நோன்பு பெருநாளை ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் கூறும் (சதகதுல் பித்ர்)
கட்டாயக் கடமை:-
நோன்பு பெருநாள் தர்மம் ஒரு கட்டாயக் கடமையாகும். ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர், ஆகிய அனைவரின் மீதும் நோன்பு பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் பெருநாள் தொழுகைக்கு புறப்படுவதற்கு முன்பாக தர்மத்தை வழங்கிட வேண்டும் எனவும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி
நிறைவேற்றும் நேரம்:-
நோன்பு பெருநாள் தர்மத்தை எப்போதிலிருந்து நிறைவேற்றலாம் என்று நபி அவர்கள் காலக்கெடு எதையும் நிர்ணையிக்கவில்லை ஆயினும் நோன்பு பெருநாள் தொழுகைக்கு முன்பாக கொடுத்துவிட வேண்டும் என்றார்கள்.
எதை கொடுக்க வேண்டும்:-
மக்கள் எதனை பிரதான உணவாக உட்கொள்கிறார்களோ அதையே கொடுக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் தங்ககாசுகள், வெள்ளி காசுகள் புழக்கத்தில் இருந்தாலும் உணவு பொருட்கள் தான் கொடுக்கப்பட்டன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் உணவில் தீட்டப்படாத கோதுமையில் ஒரு ஸாவு , பேரீச்சை பழத்தில் ஒரு ஸாவு , பாலாடை கட்டியில் ஒரு ஸாவு , உலர்ந்த திராட்சை (கிஸ்மிஸ்) ஒரு ஸாவு , என்று நாங்கள் நோன்பு பெருநாள் ஸக்காத்தை வழங்கி வந்தோம் என்று....
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி (ரலி) நூல்: புகாரி 1506
ஒரு ஸாவு என்பது இரண்டு கைகளாலும் நான்கு முறை அள்ளி கொடுப்பது ஒரு ஸாவு என்று கூறப்படுகிறது,
குறிப்பு :-
ஃபித்ராவை கொடுத்தவர்களுக்கே கொடுக்காமல் ஏழை எவர் எவர் என்பதை அறிந்து கொடுப்பது சிறந்தது .
உங்களால் முடியவில்லை என்றால் உங்கள் ஊரில் உள்ள அமைப்புகள் அல்லது பொது சேவை செய்யும் சங்கங்களிடம் கொடுங்கள் உங்கள் ஃபித்ரா நல்லமுறையில் எங்காவது உள்ள ஒரு ஏழையை சென்றடையும்.
நன்றி,
அஸ்ஸலாமு அலைக்கும்.
by .K. A
Tags
இஸ்லாமிய குறிப்புகள்