உங்கள் கிட்னியை கவனியுங்கள்!!


மனிதனுக்கு இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. உடலில் வயிற்றின் பின்புறம் அமைந்துள்ள இவை 4.5 அங்குல நீளமுடையவை. சிறுநீரகத்தின் மிக முக்கிய பணி ரத்தத்தை வடிகட்டுவதுதான். 

உடலின் ரத்தம் ஒரு நாளில் பலமுறை சிறுநீரகத்தினுள் சென்று வெளி வருகின்றது.
அப்போது உடலின் கழிவுப் பொருள்களை நீக்கி உடலின் திரவத் தன்மையை சமப்படுத்தி, தாது உப்புகளை ஒழுங்கு படுத்துகின்றது. ரத்தத்தை வடிகட்டி சுத்தம் செய்யும் பொழுது சிறுநீர் உற்பத்தி ஆகி சிறுநீராக பையில் சேர்கிறது. பின்னர் சிறுநீர் குழாய்களின் மூலம் வெளியேற்றப்படுகின்றது. 
ஒவ்வொரு சிறுநீரகமும் மில்லியன் கணக்கான நெப்ரான்களை தன்னிடம் கொண்டுள்ளது.

*கிட்னியில் கல் இருக்கிறதா? 

சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

*சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்! 

*நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.

*காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.

Post a Comment

Previous Post Next Post