இதயத்தை பாதுகாக்க சில தகவல்கள்.


நம் உடம்பில் எப்போதும் செயல்பட்டு வருவது இதயம் ஒன்று தான் . இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் , உடலில் உள்ள மற்ற உறுப்புகள் நல்ல நிலையில் இருக்கும் . அதனால் இதயத்தை பேணி காப்பது மிகவும் அவசியம் .

* தினமும் மாதுளம் பழ சாறு அருந்தி வந்தால் இதயம் வலுவடையும்.

* பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபட தேவையில்லை.

* உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

* மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.

* உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

Post a Comment

Previous Post Next Post