நம் நாட்டில் தற்பொழுது செல்போன் பயன்படுத்தி வரும் நிலை பல மடங்கு அதிகமாகியுள்ளது மேலும் நாம் எந்த ஒரு சிறிய வேலையாக இருந்தாலும் சரி செல்போன் நம்பி தான் இருக்கிறோம் அனைத்து வேலைகளையும் செல்போன் மூலமே செய்துவிடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.
சமீபத்தில் பல ஸ்மார்ட்போன்கள் புதிய புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகியது,. என்னதான் ஸ்மார்ட்போனில் பல புதிய அம்சங்களை கொண்டு வந்தாலும் இந்த ஸ்மார்ட்போனிகளில் பல மடங்கு ஆபத்துகளும் நிறைந்து உள்ளது , மேலும் பல ஸ்மார்ட்போன்களில் அதிக கதிர்வீச்சுகள் (Radiation ) கொண்டுள்ளது.
நீங்கள் அதிக நேரம் ஸ்மார்ட்போனில் பேசிக்கொண்டிருந்தாள் உங்களின் ஸ்மார்ட்போன்களின் அதிக அளவில் கதிர்வீச்சை வெளிப்படுத்தும்., மேலும் சிறிது நேரத்தில் உங்களின் ஸ்மார்ட்போன்களில் பல மடங்கு அதிக சூடாவதை நீங்கள் இங்கு எளிதாக பார்க்க முடியும். இதன் காரணத்தால் உங்களின் மூளை நரம்பு மண்டலம் பாதித்து தலைவலி, கண்வலி என பல வரும் அதற்க்கு முக்கிய காரணம் உங்களின் ஸ்மார்ட்போன் என்பதை நீங்கள் உணர வேண்டும். மேலும் நீங்கள் பேசும்பொழுது ஹெட்போன் போட்டு பேசினால் நல்லது.
அதிக கதிர்வீச்சை தரும் செல்போன்கள்.
இந்த தகவல் German Federal நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டது இந்த ஸ்மார்ட்போனில் உலகளவில் அறிமுகமாகி இருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது,
செல்போனில் எவ்வளவு தன் புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வந்தாலும் அவை யாவும் மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக அளிக்க தான் செய்கிறது செல்போன் பயன்படுத்துவது தவறில்லை ஆனால் ஒருவர் எந்த நேரமும் செல்போனில் மூழ்கி கிடப்பது தவறு.அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது ஒரு நல்ல உதாரணம்.
Tags
பயனுள்ள தகவல்