வீட்டுக்குறிப்புகள்:-
1. டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள் விட்டு மறுபடியும் போடுவது நல்லது.
2. சர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை மொய்க்காது.
3. சட்டைகளிலோ, பெட்ஷீட்டுகளிலோ ஒட்டிக்கொண்டு வர மறுக்கும் சூயிங்கத்தின் மேல் ஐஸ் கட்டியால் தேய்த்தால் சுலபமாக வந்து விடும்.
4. உங்கள் வீட்டு ஃப்ரிசரினுள் அடிக்கடி நிறைய ஐஸ் கட்டிகள் சேர்ந்து விடுகின்றனவா?அதனுள்ளே கொஞ்சம் உப்பைத் தூவி வைத்து விடுங்கள். ஐஸ் உறையாது.
5. தேங்காயை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து விட்டு உடைத்தால் அதன் நாரை சுலபமாக நீக்க முடியும். தேங்காயும் சரி பாதியாக உடையும்.
6. காய்கறி வெட்டும் கட்டையில் உள்ள கறைகளைப் போக்க சிறிது எலுமிச்சை சாற்றினை கறைகளின் மீது தடவி , சிறிது நேரம் ஊற வைத்து பின் எலுமிச்சை துண்டு கொண்டு பலகையை நன்கு தேய்த்தால், பலகையில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.
7. துணிகளில் பட்ட எண்ணெய்க் கரையை நீக்க, முகத்திற்கு தடவும் பவுடரை கரை மேல் போடுங்கள்.சிறிது நேரம் விட்டு எப்பொழுதும் போல் துணியை கழுவுங்கள். கரை காணாமல் போகும்.
8. கேஸ் ஸ்டவ்வை எளிதாக சுத்தம் செய்ய சிறிது சோடாவை அதன் மீது ஊற்றி சில நிமிடங்கள் விட்டு அதன்பிறகு சுத்தம் செய்யவும்.
9. கண்ணாடி பாத்திரங்கள் நன்கு சுத்தமாக இருக்க வேண்டுமெனில் , உருளைக்கிழங்கு கொண்டு தேய்த்தால் புதியது போன்று இருக்கும்.மேலும் இது வெங்காயம் ,பூண்டு ,முட்டை , பால் ஆல்கஹால் போன்றவற்றின் வாசனையை நீக்கிவிடும் .
10. எலிகளுக்கு அந்துருண்டையின் வாசனை பிடிக்காது.ஆகவே வீட்டில் ஆங்காங்கு அந்துருண்டையை வைத்து விட்டால் எலிகளின் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் .
11. துணிகளில் மருதாணிக் கறைகள் பட்டுவிட்டால், அந்த இடத்தை வெது வெதுப்பான பாலில் ஊற வைத்துப் பிறகு சோப்பு போட்டுத் துவைத்தால் கறை நீங்கும்.
12. ஈக்கள் அதிகம் உள்ள இடத்தில் தூவக்காலில் நெருப்பிட்டு கிராம்புத்தூளைத் தூவினால் ஈக்கள் பறந்து விடும்.
13. குளிர்சாதனப்பெட்டியைத் துடைக்கும்போது பச்சைக்கற்பூரம் கலந்த நீரினால் துடைத்தால் பூச்சிகள், சிறு வன்டுகள் உள்ளே நுழையாது.
Tags
பயனுள்ள தகவல்