கொழுகொழுவென்ற குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் கர்ப்ப காலத்தின்போது சத்தான உணவுகளை சாப்பிடுவார்கள் . ஆனால் அச்சமயத்தில் ஏற்படும் உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு சில சிறப்பு உணவுகளையும் சேர்த்து சாப்பிட வேண்டியது அவசியம்.
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது களைப்பு,சோர்வு அடிக்கடி ஏற்படுவது சகஜம்.கருவுற்ற முதல் மூன்று மாதங்களில் ஏற்படுவதற்கு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஹார்மோன்கள் . இதனால்தான் குமட்டல் , வாந்தி வருகிறது . அதிகப்படியான புரோ ஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் சுரப்பினால் சோர்வு உண்டாகிறது.
அதுமட்டுமல்லாமல் முதுகு வலி,போதிய தூக்கமின்மை , தசை பிடிப்புகள் மற்றும் கால் வலி போன்றவையும் ஏற்படுவதால் , விரைவில் உடலானது சக்தியின்றி சோர்ந்து விடுகிறது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவது மிக அவசியம் . எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடுவது மிக அவசியமான ஒன்று.
கடல் உணவுகளில் கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஒமேகா - 3 ஃபேட்டி ஆசிட்டுகள் மற்றும் அத்தியாவசிய ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளன . அயிலா அல்லது பாங்கடா , மத்தி மீன்கள் விலை மலிவானவை என நினைத்து சிலர் ஒதுக்கி விடுகின்றனர் . ஆனால் அந்த இரண்டு மீன்களிலும் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒமேகா - 3 அமிலம் நிறையவே இருக்கிறது . கர்ப்பிணிகள் அவற்றை வாரத்துக்கு மூன்று முறையாவது சாப்பிட வேண்டும்.நண்டு , இறால் சாப்பிடலாம் .அதே சமயம் கடல் உணவுகளில் அதில் மெர்குரி அதிக அளவில் இருப்பதால் , அவற்றை அளவாக சாப்பிட வேண்டும்.
தயிரில் கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளது மேலும் அதில் ஆரோக்கியமான ப்ரோ - பயோடிக் பாக்டீரியாவும் நிறைந்திருப்பதால் , உடல் சோர்வை தடுக்க முடியும்.
கீரைகளில் பசலைக் கீரையில் வைட்டமின்களும் புரதங்களும் நிறைந்திருக்கின்றன . அதேசமயம் இதில் ஃபோலிக் ஆசிட் மற்றும் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் , இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் , சோர்வை நிச்சயம் தடுக்கலாம்.
வாழைப்பழத்தில் ஃபோலிக் அமிலம் அதிகம் இருக்கிறது அது உடலில் உள்ள ஹீமோகுளோபினின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் பிரசவத்தின் உண்டாகும் வலி குறைய வாய்ப்பிருக்கிறது .
கர்ப்பமாக இருக்கும்போது உடல் வலிமையின்றி இருக்கும் . எனவே நன்கு வலிமையோடும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு , கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடவேண்டும் . இதனால் சோர்வு நீங்குவதோடு , எலும்புகள் நன்கு வலிமைபெறும் . இத்தகைய கால்சியம் வெந்தயக் கீரையில் அதிகம் உள்ளதால் , கர்ப்பிணிகள் இந்த கீரையை அதிகம் சாப்பிடுவது நல்லது.
சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்ச் மற்றும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் அமிலம் அதிக அளவில் உள்ளன . ஜூஸ் செய்து குடிப்பதால் உடலில் உண்டாகும் சோர்வைப் போக்க முடியும் . பார்லியில் இரும்புச்சத்து அதிகம் அடங்கியுள்ளது . இதுவும் உடற்சோர்வை போக்கும் .
கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் , கர்ப்பிணிகள் கேரட்டை ஜூஸ் அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லது.
கர்ப்ப காலத்தின் போது கால்சியம் அளவை சீராக வைத்துக் கொள்வது அவசியம் பால் , தயிர் , பனீர் ஆகியவற்றை அதிகமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது .
Tags
பொது குறிப்புகள்.