சுற்றுச்சூழல் மாசு தற்போது உலகை அச்சுறுத்தும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. காற்றில் அதிக மாசு கலந்திருப்பது புவி வெப்பமயமாதல் அதிகரிக்க வழி வகுக்கிறது. பல்வேறு உயிரினங்கள் அழிந்திருப்பதற்கும், ஏராளமான உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதற்கும் சுற்றுச்சூழல் மாற்றங்களே காரணமாக இருக்கிறது.
வீட்டில் நீங்கள் வசிக்கும் பகுதிகளில் செடிகளை வைத்து அலங்கரித்து, நீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.
*ஸ்பைடர் பிளாண்ட் (Spider Plant)
வீட்டில் உள்ள மாசுக்களை சுத்தமாக வெளியேற்றும் செடிகளில் முக்கியமானது ஸ்பைடர் பிளாண்ட் ஆகும். இந்த செடி தூசிகளை மட்டும் போக்குவதோடு, வீட்டிற்கு அழகையும் கொடுக்கும்.
*ஃபேர்ன்ஸ் (Ferns)
இந்த செடியின் இலைகள் மிகவும் அழகாக ப்ரில் போன்று காணப்படும். அதிலும் பாஸ்டன் ஃபேர்ன் செடி, வீட்டில் ஈரப்பதத்தை வெளியேற்றி, தூசிகளை நீக்கும். மேலும் இது பார்ப்பதற்கு ப்ளாஸ்டிக் இலை போன்று க்யூட்டாக இருக்கும்.
* ஐவி (Ivy)
இது ஒருவகையான படர்க்கொடி. இந்த கொடியும் வீட்டில் வளர்க்கக்கூடிய உள் அலங்கார செடிகளில் மிகவும் பிரபலமானது. அதிலும் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள், வீட்டில் இதனை வளர்ப்பது நல்லது.
*கமுகு மரம் (Areca Palm)
இந்த செடியின் இலைகள் பார்ப்பதற்கு தென்னை மரத்தின் இலைகளைப் போன்று காணப்படும். ஆனால் இந்த செடியை வீட்டின் உள்ளே வளர்த்தால், வீட்டில் நல்ல குளிர்ச்சியான காற்று வீசுவதோடு, தூசிகளும் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும்.
*கோல்டன் போதோஸ் (Golden Pothos)
இந்த செடியை டெவில் ஐவி என்றும் சொல்வார்கள். இந்த செடியானது வீட்டில் உள்ள ஃபார்மால்டிஹைடு, பென்சைன் மற்றும் சைலின் போன்ற தூசிகளை முற்றிலும் வெளியேற்றி, வீட்டை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.
*கற்றாழை (aloe vera)
பெரும்பாலான வீடுகளில், வீட்டின் உள்ளே வளர்க்கப்படும் செடிகளில் கற்றாழையும் ஒன்று. நிறைய பேர் இந்த செடியை ஒரு குழந்தை போன்றும், தெய்வம் போன்றும் நினைத்து பாதுகாப்புடன் வளர்ப்பார்கள். ஆனால் உண்மையில் இந்த செடியை வீட்டின் உள்ளே வளர்த்தால், வீட்டினுள் இருக்கும் அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்.
*சைனீஸ் எவர்க்ரீன் (Chinese Evergreen)
இந்த செடியானது வீட்டினுள் வரும் காற்றை சுத்தப்படுத்துவதில் சிறந்தது. மேலும் தற்போது நிறைய பேர், இந்த செடியைத் தான் வீட்டில் வளர்க்கின்றனர்.
*ஸ்நேக் பிளாண்ட் (Snake Plant)
பாம்பு செடியை வீட்டினுள் வைத்து வளர்த்து வந்தால், அது வீட்டில் உள்ள காற்றினில் கலந்திருக்கும் நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் பார்மால்
டி ஹைடு போன்றவற்றை உறிஞ்சி, சுத்தமான காற்றினை அளிக்கும்.உள் அலங்காரச் செடிகளுள் ஸ்நேக் பிளாண்ட் முக்கியமானது. இந்த செடி வீட்டிற்கு அழகை மட்டும் தருவதோடு, வீட்டில் சுத்தமான காற்றினை தருகிறது.
*மார்ஜினட்டா (Marginata)
செடி வளர்க்க விரும்புவோர், இந்த செடியின் அழகை விரும்பாமல் இருக்கமாட்டார்கள். இந்த செடியானது அந்த அளவில் அழகாக இருப்பதோடு, அசுத்தக் காற்றினை சுத்தப்படுத்தி வீட்டினுள் நுழையவிடுகிறது. மேலும் வீட்டில் இருக்கும் தூசிகளையும் நீக்குகிறது.
*பீஸ் லில்லி (Peace lilly)
வீட்டில் அழகான செடி வளர்க்க ஆசைப்பட்டால், பீஸ் லில்லியை வளர்த்து வாருங்கள். இது அழகுடன், வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.
Tags
நம்ம வீடு