ரிலாக்ஸ் செய்ய கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க...


கணவன்: உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்.
மனைவி: ஆனா…அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?

______________

டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.

இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????

______________

மாணவன் :சார், டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?… 

______________

கணவன் : சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்!

மனைவி : சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது..
கணவன் : ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்! 

____________

நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா...!"

"பெண் அவ்வளவு அழகா?" 

"இல்லடா... விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா...!"

_____________

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.

நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும். 

______________

என்னதான் உங்க வீட்டு டிவி விடிய விடிய ஓடினாலும் அதால ஒரு இஞ்சு கூட நகரமுடியாது. 

_______________

ஊசி போட
நர்ஸ் வேணும்,
காசு போட
பர்ஸ் வேனும்,
காபி போட
சுகர் வேணும்,
கடலை போட
ஃபிகர் வேணும்,
கொக்கரக்கோ கும்மாங்கோ!

Post a Comment

Previous Post Next Post