விஞ்ஞான வருகைக்கு முந்தைய காலத்தில் காதலை சொல்லவே ஆணுக்கும் பெண்ணுக்குமான தயக்கம் நிறைய இருக்கும் . பார்வையாலேயே பல நாட்கள் ஓடும் . அதன் பிறகு ஒருவழியாக காதலை சொல்லி ...அது . கல்யாணத்தில் முடிந்தால் அவர்களுக்கு இடையிலான புரிதல் நிறைய இருக்கும்.
கூட்டுக் குடும்பமாக ஆட்கள் நிறைந்திருக்கும் . அங்கே அந்த காதல் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் கண்களால் நடக்கும் உரையாடல் அதற்காக அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருந்தது இல்லை . சண்டைகளைத் தாண்டி அவர்களுக்குள் புரிதல் இருந்தது.
ஆனால் இன்று... ? பார்த்ததும் ஒரே நாளில் காதலைச் சொல்லி , இரண்டே நாட்களில் எல்லாம் பேசி முடித்து . வாழ்க்கை என்பது சலித்துவிடுகிறது . சீக்கிரத்தில் தொடங்கி சீக்கிரத்தில் முடிந்து விடுகிறது . கணவன் மனைவிக்குள் மட்டுமல்ல பொதுவாகவே உறவுகளுக்குள் விரிசல் எங்கிருந்து வருகிறது ?

கணவன் மனைவி இருவருக்குள் ஏற்படும் சின்ன சின்ன விரிசல்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், அவ்வப்போது சரி செய்து கொள்வது அவசியமாகும்.
திருமண வாழ்க்கையில் மோதல்கள் உண்டாவதை எளிமையான ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. கணவன் மனைவி உறவு என்பது உடலில் உயிர் இருக்கும் வரை உடன் வரக்கூடிய ஒன்று. இதில் ஏற்படும் சின்ன சின்ன விரிசல்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், அவ்வப்போது சரி செய்து கொள்வது அவசியமாகும். இல்லை என்றால் மொத்தமாக விரிசல் விழுந்து விடும்.
கணவன் மனைவிக்குள் உண்டாகும் விரிசல்கள் அவர்களை மட்டுமே பாதிப்பதில்லை. அவர்களது குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கிறது. எனவே கணவன் மனைவிக்குள் வரும் விரிசல்களை சாதரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவற்றை சரி செய்து எப்படி ஒருவரை ஒருவர் ஆதரித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதை பற்றி சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியம்.
1 . ஈகோ ( Ego )
குடும்பத்துக்குள் எட்டிப் பார்க்கக்கூடாத விஷயம் ஈகோ ! அந்த வார்த்தைக்குள்ளேயே ' கோ என்பது இருப்பதால் , யாராவது ஒருவருக்கு அது வந்துவிட்டால் , நிம்மதியை விரட்டிவிடும் . நீ பெரியவனா . . . நான் பெரியவளா என்று போட்டிபோடும் மைதானம் அல்ல , வாழ்க்கை .
தவறான புரிதல் (Misunderstanding )
வாழ்க்கையை அழகாக மாற்றுவதே புரிதல்தான் . அது கணவன் மனைவியாக இருந்தாலும் சரி.. அப்பா பிள்ளை , அண்ணன் தங்கை என எந்த உறவுகளானாலும் புரிதல் என்பது . அவசியம் . புரிதல் மட்டும் இருந்தால் வாழ்க்கை வரமாகும்.
சந்தேகம் ( Suspicion )
வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் வீட்டுக்குள் வரவே கூடாத ஒன்று சந்தேகம் . வாழ்க்கையை நரகமாக மாற்றும் சக்தி சந்தேகத்துக்கு உண்டு . பல வீடுகளில் புகுந்த சந்தேகப்பேய் , வீட்டையே புரட்டிப்போட்டு , சில இடங்களில் உயிரையும் குடித்திருக்கிறது.
மனம் விட்டுப் பேசாதது ( Not being open about their feelings )
எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் மனம் விட்டுப் பேசினால் தீர்ந்துவிடும் . ஆனால் , அப்படி பேசுவதற்குதான் பலர் தயாராக இருப்பதே இல்லை . கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் வரும் சண்டைகளை இருவரும் பேசாமல் தள்ளிப்போடுவது தான் விரிசலை விரிவுபடுத்துகிறது.
மூன்றாம் நபரின் தலையீடு ( The intervention of a third person )
குறிப்பாக இது கணவன் - மனைவி கவனிக்க வேண்டிய விஷயம் . எந்த பிரச்னை வந்தாலும் அதை எந்த காரணத்துக்காகவும் மூன்றாம் நபரிடம் கொண்டு போகக் கூடாது . அவர்கள் இருவருமே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் . கணவனுக்கு மனைவியைவிடவும் , மனைவிக்கு கணவனைவிடவும் வேறு எவரும் நல்லது நினைக்க முடியாது ; நல்லது செய்யவும் முடியாது . மூன்றாவது நபர் ஒருவர் உங்கள் பிரச்னைக்குள் வந்தாலே நீங்கள் வேறு ஒரு பிரச்னைக்குள் சிக்க தயாராகி வருகிறீர்கள் என்பதுதான் மறைமுகப் பொருள்.
விட்டுக்கொடுக்காதது ( Being Selfish )
குடும்பத்துக்குள் சண்டை வருவது இயல்பு . சண்டைக்குப் பிறகு யார் முதலில் பேசுவது என காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை . எந்த பிரச்னையாக இருந்தாலும் இரவு தூங்கப்போவதற்குள் முடிவுக்கு வந்துவிட வேண்டும் . இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்தாலே போதும் ; மற்றவர் தானாக சமாதானம் ஆகிவிடுவார் .

Tags
உறவு