இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு உணவு உண்ணும் ஆர்வம் குறைந்து, நொறுக்குத்தீனிகளை எந்நேரம் பார்த்தாலும் அரைத்துக் கொண்டே இருக்கும் பழக்கம் வந்துவிட்டது;
பெற்றோர்களும் குழந்தை உணவை தான் உண்ணமாட்டேன்கிறான் இதையாவது சாப்பிடட்டும் என்று குழந்தையின் தேவைக்கு அதிகமாக நொறுக்குத்தீனிகளை வாங்கி குவித்து விடுகின்றனர்..! பெற்றோர் செயலில் மனம் மகிழ்ந்த குழந்தைகளும், அவற்றை தின்று வயிற்றை நிரப்பிக்கொண்டே, கூடவே உடல் எடையையும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றனர்.
ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் வாங்கிக் கொடுக்கும் நொறுக்குத்தீனிகளால் குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை அறியாமலேயே வாங்கிக்கொடுக்கின்றனர்.!
அப்படி குழந்தைகளுக்கு புற்றுநோய் அளிக்கும் நொறுக்குத்தீனிகள் எவை என்று இப்பதிப்பில் பார்க்கலாம்..!
*சீட்டோஸ் :
சீட்டோஸ் எனப்படும் சில்லுகள் பார்க்க அழகாக, கண்ணைக் கவரும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுவதால், நாம் எதைப்பற்றியும் எண்ணாமல், ஏமாந்து குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்துவிடுகிறோம்..! ஆனால், இந்த சில்லுகளில் அதிகப்படியான சோடியம் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன; இந்த சில்லுகள் அடர்ந்த ஆரஞ்சு அல்லது அடர்ந்த நிறத்தில் இருக்க பெட்ரோலியம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதை உண்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய், ஹைப்பர் ஆக்ட்டிவிட்டி எனும் அதிகப்படியான செயல்பாடு, ஒவ்வாமை போன்றவை ஏற்படுகின்றன..!
*மைக்ரோவேவ் பாப்கார்ன்..!
PFOA (perfluorooctanoic acid), diacetyl and propyl gallate போன்ற வேதிப்பொருட்கள் இன்றைய எண்ணெயில்லாத பாப்கார்னை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. இதில் PFOA எனும் அமிலம் நச்சுத்தன்மை வாய்ந்தது; ஆனால் இதையெல்லாம் அறியாமல் பாப்கார்ன் குழந்தைகளின் உடலுக்கு நல்லது என்று பெற்றோர் வாங்கிக் கொடுக்கின்றனர்.
*உருளைக்கிழங்கு சிப்ஸ் :
இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ்களை அதிக வெப்பநிலையில் பொரித்து எடுப்பதால், அவற்றில் காரசினோஜெனிக் எனும் புற்றுநோய் உருவாக்கும் காரணி தோன்றிவிடுகிறது; இதை அக்ரிலாமைட் என்றும் அழைப்பர். மேலும் இதில் அதிக உப்பு சேர்ப்பதும் குழந்தைகளின் உடல் நலத்தை மிகவும் பாதிக்கும்..!
*குளிர்பானங்கள்..
coke, Pepsi, Fanta, sprite என மேலும் பல குளிர்பானங்கள் குழந்தைகளின் உடல் நலத்தைக் குதறும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டவையே! இவற்றைப் பருகுவதால், குழந்தைகளுக்கு pancreatic, colon and rectal cancer. போன்ற புரியாத பல நோய்களும், பற்சிதைவு, குண்டாதல், சர்க்கரை நோய் போன்றவையும் ஏற்படுகின்றன.
*தனித்த சுவை கொண்ட பானங்கள்..
இந்த மாதிரியான பானங்களில் அத்தனித்த சுவையை கொண்டு வருவதற்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், குழந்தைகளுக்கு இருதய நோய், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
*பிரட்டுகள்..
பிரட்டுகளை தயாரிக்க சேர்க்கப்படும் வேதி ஈஸ்டுகள், செயற்கை சர்க்கரை போன்றவை குழந்தைகளில் புற்றுநோய் மற்றும் அவர்களின் உடற்செயலிய மாற்றத்தைக் குழைத்து, அவர்களை குண்டாக்கி குழந்தைகளின் உடலை நிலைகுலைய செய்கின்றன..
*செயற்கை தானிய உணவுகள்..!
கெலாக்ஸ், சாக்கோஸ் என குழந்தைகளுக்கு நலம் பயக்கும் என பெற்றோர்கள் அளிக்கும் செயற்கை தானிய உணவுகள், குழந்தைகளின் உடல் நலத்தை முற்றிலுமாக கெடுத்துவிடுகின்றன. இந்த தானிய உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரை, நிறங்கள் மேலும் பல வேதிப்பொருட்கள் போன்றவை குழந்தைகளுக்கு அதிக தீங்கினை விளைவிக்கின்றன.
இது குழந்தைகளின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதாலேயே பல நிறுவனங்களின் பெயர்கள் இந்த பதிப்பில் இடம் பெற்றுள்ளன; ஆகையால் கவனம் பெற்றோர்களே! மேலும் குழந்தைகளுக்கு KFC சிக்கன், மேகி போன்றவற்றை அளிக்காதீர்கள்..! இது உங்கள் குழந்தைகளின் நலத்திற்காக நங்கள் கூறும் சிறு அறிவுரையே! முடிவு உங்கள் கையில்..!!
தாய்மார்களே! நீங்கள் அறிந்த தகவல்களை மற்ற அன்னைகள் அறிந்து அவர்தம் குழந்தைகளை காப்பாற்ற, பதிப்பினை பரவச் செய்து உதவுங்கள்..! வேறு எதையெதையோ பகிர்கிறோம் இது குழந்தைகளின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம்..! கட்டாயம் பகிர்ந்து குழந்தைச் செல்வங்களை காத்தருளுங்கள்..!!
நன்றி. tinyste Tamil