கணவன்-மனைவி சண்டை திருமண உறவை பாதிக்குமா? பலப்படுத்துமா?


கணவன் மனைவிக்குள் சிறு சிறு சண்டை என்றால் அது சரியாகிவிடும். பெரிய சண்டைகள் அடிக்கடி வந்தால் அது உறவை பலப்படுத்தாது. பாதிக்கவே செய்யும்.

கணவன் மனைவி சண்டை திருமண உறவை பலப்படுத்தும் என்று சிலர் சொல்கிறார்கள் மனதில் உள்ளவற்றை சண்டையின் மூலம் கொட்டி தீர்த்தால் பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியும் என்பது அவர்களின் வாதம். ஆனால் சண்டை என்பது அடிக்கடி வந்தால் அது கன்டிப்பாக உறவை பலவீனப்படுத்திவிடும் என்பதுதான் உண்மை.


என்னைப் பொறுத்தவரை கணவன் மனைவி இடையே சண்டையே வரக்கூடாது. அது எப்படி சாத்தியம் என்கிரீர்கள ? எளிது கணவன் மனைவிக்கு பிடித்தவைகளை மட்டுமே செய்ய வேண்டும். மனைவி கணவனுக்கு பிடித்தவைகளை மட்டுமே செய்ய வேண்டும். இதற்கு இருவரும் பிடித்தவை பிடிக்காதவை எவை என தெரிந்திருக்கவேண்டும். பிடித்தவற்றை செய்கிரீர்களோ இல்லையோ ஆனால் நிச்சயம் பிடிக்காதவற்றை செய்யவேக்கூடாது. அப்படி இருந்தால் நிச்சயமாக கணவன் மனைவி உறவை பலப்படுத்தும்.


இது படிப்பதற்கு மிக எளிதாகத் தோன்றினாலும் நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதானது கிடையாது. ஆனால் இருவரும் மனசு வைத்தால் மிக எளிமையாக இவற்றை நடைமுறைப்படுத்தலாம். ஒரு வெற்றி அல்லது சந்தோஷம் கிடைக்க வேண்டும் என்றால் நாம் சிறிது உழைக்க வேண்டும் அல்லவா? நீங்கள் உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் உயிருக்கு உயிராய் வாழவேண்டும் என்று நினைத்தால் அதற்காக சிறிது கஷ்டப்படதான் வேண்டும்.


இதில் முக்கியமான பிரச்சினை என்னவென்றால் எதையும் விட்டுக் கொடுக்காமல் தனக்கு தான் தன்துணை எல்லா விஷயங்களையும் விட்டுத்தர வேண்டும் என்று நினைப்பதுதான். அப்படி இல்லாமல் இருவரும் விட்டுக் கொடுத்து மட்டும்  வாழ பழகிக்கொண்டால் இல்லர வாழ்க்கை சிறப்பாக இருக்கும். விட்டுக்கொடுத்து வாழ்த்துவந்தால் எப்படிப்பட்ட துன்பங்கள் உங்கள் வாழ்க்கையில் வந்தாலும் அவற்றை நீங்கள் எளிதாக எதிர்கொள்ளமுடியும். எல்லா நிலையிலும் நீங்கள் சந்தோஷமாக வாழமுடியும்.

by .K.A

إرسال تعليق

أحدث أقدم