முகப்பருக்கள் நீங்க இவைகளை சாப்பிடுங்கள்!


பருக்கள் பலரின் முகத்தின் அழகை கெடுக்கிறது. இதற்கு பலர் ஆயிர கணக்கில் செலவு செய்கின்றனர் ஆனால் பயனில்லை என்கின்றனர்.  பருக்கள் முகத்தில் மட்டும் தான் உருவாகும் என சிலர் நினைக்கின்றனர் ஆனால் அது அப்படி கிடையாது.

பருக்கள் முகம், கழுத்து, தோள்பட்டை, அக்குள் பகுதி, பிறப்புறுப்பு போன்ற இடத்தில் வேண்டுமானாலும் பருக்கள் உண்டாகும். அப்படி உங்களை பாடாய்படுத்தும் பருக்களை நீக்க மற்றும் வராமல் தடுக்க எளிய வழிகள் உள்ளன. இதற்காக நீங்கள் ஆயிர கணக்கில் செலவு செய்ய வேண்டியதில்லை.தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டியதில்லை.

இனி முகப்பருக்களை இனி எப்போதுமே உருவாகாமல் தடுக்க புதுவித டயட் முறையை பார்க்கலாம்.

பருப்பு வகைகள்:
சாப்பிட கூடிய உணவில் அன்றாடம் ஜிங் நிறைந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டாலே நல்ல பலனை அடையலாம். பூசணி விதைகள், முந்திரி, கடல் உணவுகள், பருப்பு வகைகள் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்தால் பருக்களில் இருந்து தப்பிக்கலாம்.


வைட்டமின் எ:
வைட்டமின் எ மற்றும் வைட்டமின் ஈ  நிறைந்த உணவுகள் பருக்களில் இருந்து உங்களை காக்கும். ஆகவே கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முளைக்கீரை, பாதாம் போன்ற உணவுகளை சாப்பிட்டு வாருங்கள்.

ஒமேகா 3:
மீன், முட்டை, வால்நட்ஸ், சீயா விதைகள் போன்றவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்து கொண்டால் பருக்களின் பாதிப்பு இருக்காது, அத்துடன் உடலில் உண்டாகும் வீக்கங்கள், கட்டிகள் போன்றவையும் குறைந்து விடும்.


கிரீன் டீ:
பருக்களை தடுக்கும் ஆற்றல் கிரீன் டீயிற்கு உள்ளதாம்.தினசரி காலை வேளையில் கிரீன் டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டு வந்தால் பருக்களினால் உண்டாகும் பிரச்சனைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும்.

ஜுஸ்:
தக்காளி, பப்பாளி, தர்பூசணி, அண்ணாசி போன்றவற்றை ஜூஸ் செய்து குடித்துவந்தால் பருக்கள் பாதிப்பு இருக்காது. மேலும் இந்த ஜூஸ்கள் அதிக ஆற்றலை உடலுக்கு தந்து நோய்களின் பிடியில் இருந்தும் நம்மை காக்கும்.



إرسال تعليق

أحدث أقدم