நிறைய தம்பதியர்களுக்கு தற்போது இருக்கும் பெரிய பிரச்சனை கர்ப்பம் தரிப்பதில் ஏற்படும் தாமதம். கர்ப்பம் தரிக்க நிறைய தடவை அவர்கள் முயன்றும் அது நடப்பதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பரிசோதனை செய்தும் ரிசல்ட் என்னவோ நெகடிவ் ஆகவே அமைகிறது. இந்த நெகடிவ் ரிசல்ட் தம்பதியரின் மனநிலையை பாதிக்கதான் செய்கிறது.
கர்ப்பம் தரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. உங்களுக்கு இந்த முறை பரிசோதனை நெகடிவ் ஆக அமைந்தால் கவலைப்படாமல் அடுத்த மாதம் முயற்சிக்க வேண்டும்.
கடந்த ரிசல்டை நினைத்து எப்பொழுதும் சோகத்திலேயே மூழ்கி இருக்காதீர்கள். அப்படி இருப்பதால் எதுவும் மாறப்போவதில்லை.
நெகடிவ் ரிசல்ட் உங்களுடைய துணையை மன அழுத்தத்தில் இருக்கச் செய்யும் அது துக்கம், கோபம், வருத்தம் போன்றவற்றால் வெளிவரலாம் எனவே அவருக்கு ஆறுதலாக இருந்து நேர்மறை எண்ணங்களை விதையுங்கள். நெகடிவ் ரிசல்ட் உங்களை பாதித்து இருந்தாலும் உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ மறந்து விடாதீர்கள். சில நாட்களில் கவலையை மறந்து சந்தோஷமான பழைய நிலைக்கு செல்வது நல்லது.
ஒவ்வொரு மாதமும் என்னாச்சு என்னாச்சு என நச்சரிக்கும் நபர்களை விட்டு விலகி இருங்கள். அதற்கு பதிலாக உங்களுக்கு சீக்கிரமே நல்லது நடக்கும் கவலைப்படாதீங்க என நம்பிக்கையூட்டும் நல்ல நபர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் நெகடிவ் ரிசல்ட் வந்தால் நீங்கள் இருவரும் மருத்துவரை நாடலாம். அவர்கள் நீங்கள் சீக்கிரம் கர்பம் தரிப்பதற்கான வழிகளையும் சிகிச்சைகளையும் உங்களுக்கு கூறுவார்கள்.
Tags
உடல்நலம்