கடந்த சில மாதங்களாக ஏடிஎம் மோசடிகள் அதிகரித்துள்ளன. வங்கிகளுக்கு ஏடிஎம் மோசடி தொடர்பான புகார்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக வங்கிகள் புதிதாக அனைத்து ஏடிஎம் அட்டைகளிலும் சிப் பொருத்தினாலும் வாடிக்கையாளர்கள் தங்களின் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி நம் பணத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
செய்யக்கூடியவை :-
* நீங்கள் ஏடிஎம் - ல் பரிவர்த்தனை செய்வது அந்தரங்கமாக செய்ய வேண்டும்.
* கடவுச்சொல் உள்ளீடு செய்வதை யாரையும் பார்க்க அனுமதிக்கக்கூடாது.
* பரிவர்த்தனை முடிந்த பின்பு ஏடிஎம் திரையில் வரவேற்றுத்திரை உள்ளதை உறுதிசெய்ய வேண்டும்.
* உங்களின் தற்போதைய கைப்பேசி எண்னை வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும். அதன் மூலம் உங்களின் அனைத்து பரிவர்த்தனைகளும் உங்களுக்கு குறுஞ்செய்தியாக வரும்.
* ஏடிஎம்-ல் உங்களைச் சுற்றியுள்ள நபர்களின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் மற்றும் அறிமுகமில்லாத நபர்கள் உங்களுடன் உரையாட முயற்சி செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்.
* சந்தேகத்திற்கிடமான வகையில் ATM கருவியில் ஏதேனும் கூடுதல் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளதா என பார்க்கவும்.
* உங்களின் ATM அட்டை தொலைந்து போனால் உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
* பணம் எடுத்தவுடன் எவ்வளவு பணம் எடுக்கப்பட்டுள்ளது எனக் குறுஞ்செய்தியை சரிபார்க்கவும்.
செய்யக்கூடாதவை :-
* ATM கடவுச்சொல்லை ATM அட்டையில் எழுதி வைக்கக் கூடாது. அதை மனதில் பதியவையுங்கள்.
* முன் பின் அறிமுகமில்லாதவர்கள் உங்கள் ATM அட்டையை பயன்படுத்த மற்றும் உங்களுக்கு உதவிபுரிய அனுமதிக்க வேண்டாம்.
* வங்கி ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்பட யாரிடமும் ATM கடவுசொல்லை வெளிப்படுத்தக்கூடாது.
* பரிவர்த்தனை செய்யும்போது உங்கள் ATM அட்டை உங்கள் கண் பார்வையிலிருந்து எங்கும் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .
* பரிவர்த்தனையின் போது மொபைல் போனில் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
by .K.A
Tags
பயனுள்ள தகவல்