உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படுகிறதா ? அதற்கான அறிகுறிகள்!


இன்றைய காலத்தில் வங்கி கணக்கு தொடங்கி மளிகை கடைக்கு லிஸ்ட் அனுப்புவது வரை எல்லாவற்றுக்கும் ஸ்மார்ட்போன்தான் என்றாகிவிட்டது. அப்படிப்பட்ட ஸ்மார்ட்போனை உங்களுக்கு தெரியாமலே ஊடுருவிப் பார்க்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா ? இதுதான் ஸ்மாட் போனின் மைனஸ் .

நீங்கள் எத்தனை செக்யூரிட்டிகள் செய்துவைத்திருந்தாலும் உங்கள் ஃபோனிலுள்ள தவகவல்கள் திருடப்படலாம்.



சைபர் கிரைம் அதிகம் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் இருக்கிறது. சைபர் பாதுகாப்புகள் நன்றாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 23-வது இடத்தில் உள்ளது.

ஸ்மார்ட்போனை ஹேக் செய்கிறார்கள் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? 

இதை சில அறிகுறிகள், கோளாறுகளை வைத்து உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படுகிறதா என்பதை கனிக்கமுடியும்.

சம்பந்தமே இல்லாமல் போன் சூடாவது :-

ஸ்மார்ட்போனில் அதிகநேரம் பேசினாலோ அல்லது அதிகநேரம் கேம்ஸ் விளையாடினாலோ சூடாகும் , அது போன்ற ஏதாவது பயன்பாட்டின் போது சூடானால் பயம் எதுவுமில்லை, மாறாக டேபில்மீது சும்மா இருக்கும் போன் சூடானால் அதை நீங்கள் கண்டுகொள்ளாமல் கடந்திருக்கலாம் பயன்பாட்டில் இல்லாதபோது உங்களின் ஸ்மார்ட்போன் தானாகவே சூடானால் அலார்ட் ஆக வேண்டியது அவசியம். காரணம் உங்களுக்கு தெரியாமலேயே " ஆப்" ஒன்று உங்கள் போனுக்குள் இயங்குவதே சூடாவதற்கு காரணம்.



தேவையில்லாத சத்தம் :-

நீங்கள் ஒருவருடன் ஃபோனில் பேசிக்கொண்டிருக்கும் போது தொந்தரவு தரும் சத்தங்கள் வந்தால் அதை லைன் பிரச்னை என்று கடந்து போய்விடாதீர்கள் அதுபோன்ற சத்தங்கள் அடிக்கடி கேட்கும்போது போனை துண்டிப்பது நல்லது. இது போன்ற சத்தங்களும் ஹேக் செய்ததற்கான அறிகுறிகள்,



ஆட்டோமெட்டிக் ஸ்விட்ச் ஆஃப் :-

உங்கள் ஸ்மார்ட் போன் தானகவே ஸ்விட்ச் ஆஃப் மற்றும் நம்பர் டயல் ஆனால் அது ஹேக் செய்யப்படுகிறது என அர்த்தம்.

சில அப்ளிகேஷன்கள் ஆபத்து :-

அதிகம் பயன்படுத்தாத மற்றும் முற்றிலும் பயன்படுத்தாத அப்ளிகேஷன்களை ஸ்மார்ட்போனில் வைத்திருப்பதை தவிர்த்துவிடுங்கள் . பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கின்றன என்பதற்காக அப்ளிகேஷன்களை டவுன்லோடு செய்ய வேண்டாம் பிளே ஸ்டோரிலும் ஆபத்க்கள் இருக்கவே செய்கின்றன.



உங்கள் ஸ்மார்ட்போனில் தேவையில்லாத புகைப்படங்கள், வீடியோக்கள், குடும்ப புகைப்படங்கள் போன்றவற்றை வைத்திருப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும், மற்றும் தனிநபர் ஒருவரிடம் உங்கள் ஸ்மார்ட்போனை கொடுக்க வேண்டாம்,.

Post a Comment

Previous Post Next Post