வீட்டை அழகாக கட்டுவதை காட்டிலும் கட்டிய வீட்டை அழங்கரிப்பது நல்லது. அப்படி செய்வதன் மூலம் முழுமையான அழகு வீட்டிற்கு கிடைக்கும். புதுமையான சிந்தனைகள் இருந்தாலே வீட்டைக் கண்ணை கவரும் வகையில் மாற்றலாம்.
வீட்டை அழகுபடுத்தும் பொருட்களில் பூக்கள் , பூ ஜாடிகளுக்கும் முக்கிய பங்குண்டு. உங்கள் வீட்டு வரவேற்பரையில் இனிய நினைவூட்டும் உங்கள் குடும்ப புகைப்படங்களை ப்பிரேம் செயது அடுக்கு அடுக்காக மாட்டிவைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும். போட்டோ ப்ரேம்கள் அதிகமாக விற்பனைக்கு வந்துள்ளன.
உங்கள் வீட்டு ஹாலில் ஓவியப்படங்கள் அல்லது ப்ரின்ட் செய்யப்பட்ட படங்களை ப்ரேம் செய்து மாட்டினால் அழகாக இருக்கும். ஜன்னல், அறைவாசல், போன்றவற்றில் பொருத்தமான திரைச்சீலைகளை தேர்வு செய்தால் வீட்டிற்கு பாதிஅழகு வந்துவிடும்.
வீடு முழுவதும் பசுமை போன்ற தோற்றம் கொண்டால் வீடு இன்னும் அழகாக இருக்கும். வீட்டின் வண்ணங்களுக்கு ஏற்றவாறு மின் விளக்குகளை பொருத்தினால் வீடு இரவிலும் அழகு கூடும்.
உங்கள் வீட்டின் முக்கியமான பகுதி ஹால் அந்த ஹாலில் உள்ள டிவி. மற்றும் ஒலி வகை சாதனங்களை வீட்டின் அழகிற்கு ஏற்றவாறு பொருத்தினால் வீட்டிற்கு வரும் உறவினர்களை அதுவே வரவேற்க்கும்.
Tags
நம்ம வீடு