மக்கும் குப்பை, மக்காத குப்பை !!


முன்பெல்லாம் மளிகை கடைக்குச் சென்றால் தனியாக பொருட்கள் வாங்க ஒரு பைஒன்றை எடுத்துச்செல்வது வழக்கம். ஆனால் இப்போது கடைகளில் பல வகைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தி மக்களால் தவிற்க்க முடியாத ஒரு பொருளாக பிளாஸ்டிக் மாறியது.

முன்பெல்லாம் ஜவுளிக்கடைகளில் சணல் பைகளில் துணிகளை தருவார்கள் அது எல்லாம் மாறி பலவிதமான பல மாடல்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறது.  இதற்கு முதல் காரனம் மக்கள் பிளாஸ்டிக்கின் தீமையை அறியாதது.

குப்பைகளை தரம் பிரிப்பது இந்த காலகட்டத்தில் மிக முக்கியமான ஒன்று.

மக்கும் பொருட்கள்:-

* வீட்டில் சமையலறைக் கழிவுகள் 90% மக்கும் குப்பைகள்தான். சமைத்த உணவுகள், சமைக்காத உணவுப் பொருட்கள் , பழங்கள் மற்றும் அதன் கழிவுகள், பூ மற்றும் அதன் கழிவுகள், உதிர்ந்த இலைகள், தாவரக் கழிவுகள்,டீ தூள் மற்றும் காயிதங்கள். ஆகியவை சீக்கிரம் மக்கும் தன்மை கொண்டவை.

மக்கும்  பொருட்களை நம் வீட்டுத்தாவரங்களுக்கு உரமாக பயன்படுத்தலாம்.

மக்காத பொருட்கள்:-

*( பிளாஸ்டிக்) பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தோல்பொருட்கள், கண்ணாடி பொருட்கள், பால் கவர்கள், லைலான் துணிகள், ஒயர் வகைகள், சிமெண்ட் சாக்குகள், இவைகள் அனைத்தும் மக்காத பொருட்களாகும்.

மக்காத பொருட்களை தனியாக சேமித்து அதனை தெருக்களில் உள்ள மக்காத குப்பை தொட்டிகளில் போடவும்.

மக்காத குப்பைகளால் பலவிதமான தீமைகள் ஏற்படுகின்றன எனவே அதனை தவிற்ப்பதும் அதனை தனியாக பிரிப்பதும் நம்முடைய கடமையாகும், இந்த கடமையை நம் வீட்டிலிருந்து துவங்கலாம்.....

பொதுநல தகவலுடன்..

செந்ததலைப்பட்டினம் பொதுநல சங்கம்,


மேலும் பயனுள்ள தமிழ் குறிப்புக்களை YouTube -ல் கான https://www.youtube.com/channel/tail kuripugal

Post a Comment

Previous Post Next Post