விளையாட்டுகளில் குழந்தைகளுக்கு பலனுண்டு ஆனால் பலனற்ற விளையாட்டுகளால் விபரீதம் மட்டுமே உண்டு.
குழந்தைகள் கேம்ஸ்களுக்கு அடிமையாக என்ன காரணம்?
குழந்தைகளை அடிமைப்படுத்தும் விதத்தில்தான் ஒவ்வொரு கேம்மும் வடிவமைக்கப்படுகிறது. வெற்றிபெற வேண்டும் என்ற வெறியை தூண்டும். இது சில குழந்தைகளுக்கு மோசமான பாதிப்பை ஏற்ப்படுத்தும்.
குழந்தையின் முழு கவனமும் விளையாட்டை நோக்கி சென்று குழந்தையை அடிமையாக்கும்.
என் குழந்தை சமத்து அவன் கேம்ஸ்சுக்கு அடிமையாகமாட்டான் என்று நினைக்காதீர்கள் அப்படி நினைத்தீர்கள் என்றால் அது எவ்வளவு புத்திசாலியான குழந்தையாக இருந்தாலும் அது அடிமையாக்கிவிடும்.
சில குழந்தைகளுக்கு மூளையில் டோபாமின் என்ற ஹார்மோன் அதிகம் சுரக்கும் அந்த குழந்தைகள் எளிதில் இதற்கு அடிமையாகி விடுவார்கள்.
எளிதில் குழந்தைகளை கவரக்க்ஷய வகையில்தான் அனைத்து மொபைல் கேம்ஸ்களும் வடிவமைக்கப்படுகின்றன.
தடுக்கும் முறை :-
* உங்கள் குழந்தைகள் தினமும் 1 அல்லது 2 மணி நேரத்திற்கு மேல் மொபைல் கேம்ஸ் விளையாடினால் அதை கட்டுப்படுத்துங்கள்.
* குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு மேல் விளையாட அனுமதிக்காதீர்கள்,
* உங்கள் குழந்தைகள் இதற்கு அடிமையாக இருந்தால் அதை உடனே தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டாம் படிப்படியாக நேரத்தின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.
* குழந்தைகளை அதிகமாக இயற்கையான விளையாட்களை விளையாடவையுங்கள் அப்படி செய்வதன் மூலம் மொபைல் விளையாட்டின் ஆர்வம் குறையும்.
* குழந்தைகளை முழு நேரமும் படிக்க வேண்டும் என்று வர்புர்த்த வேண்டாம்.
* அதிகமாக குழந்தைகளை பீச், பார்க், சிறுவர் பூங்க போன்ற இடங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள்.
கேம்ஸ் அடிமையின் அறிகுறிகள்:-
* தூக்கமின்மை .
* ஒற்றை தலைவலி,
* சோர்வு .
* பலகீனம்
* பள்ளி பாடங்களில் பின்னடைவு
* கை, கால் ,முதுகு, கழுத்து வலிகள்
* மன அழுத்தம்.
* காரனமற்ற கோபம்
* எரிச்சல் .
* திடீர்ரென்று உடல் எடை குறைதல்.
* உணவு மீது விருப்பமின்மை .
ஆதாரம் :- அரசினர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்.
தகவல் by .K.A
Tags
பயனுள்ள தகவல்