இன்று எக்ட்ரானிக் சாதனத்தினை அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், மிக முக்கியமாக உபயோகிப்பது ஹெட்போன்.
ஏனெனில் கம்ப்யூட்டர் முன்பு எப்போதும் எந்திரம் போல் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு பெரிய பொழுதுபோக்கு அம்சமே பாடல்கள் கேட்பது தான்.
ஹெட்போன்களில் இருந்து நேரடியாக காதுகளுக்குள் செலுத்தப்படும் 90 டெசிபல் ஒலியானது, காது கேட்பதில் சிக்கல் தொடங்கி காது கேளாமை பிரச்சனை வரை ஏற்படுத்தும். ஒருவர் 5 நிமிடங்களுக்கு விடாது 100 டெசிபல் ஒலியை கேட்கிறார் என்றார் அவருக்கு காது கேட்காமல் போக வாய்ப்பு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஹெட்போன்தனை நீங்கள் மட்டுமே பயன்படுத்தமாட்டீர்கள் அல்லது பிறர் ஹெட்போன்களை சகஜமாக பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் நீங்கள் என்றால் உங்களுக்கு எளிதில் காது சார்ந்த தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
நமது உடல் பகுதியிலேயே மிக மிருதுவானது காது பகுதி என்று சொல்லலாம். இதனால் காதுகளில் பொருத்தி கொள்ளும் எந்த பொருளையும் தரமானதாக வாங்குவது மிக அவசியம். மலிவு விலை என்பதற்காக மட்டமான பிலாஸ்டிக்கில் செய்த ஹெட்போன் மற்றும் இயர்போன்களை பயன்படுத்துவது காதுகளுகக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதனால் விலை கொஞ்சம் அதிகமானதாக இருப்பினும், சிறந்த இயர்போன்களை வாங்குவது நல்லது. அதோடு எல்லா வகையிலும் இயர்போனைவிடவும் ஹெட்போன் சிறந்தது என்று கூறலாம்.
தொடர்ந்து ஹெட்போன் இயர்போன்களை பயன்படுத்துவது, தலைவலி மற்றும் ஓய்வில்லாத்தன்மை போன்றவற்றை ஏற்படுத்தும் என்று கூறலாம். இதனால் 15 நிமிடத்திற்கொரு முறை இயர்போன் மற்றும் ஹெட்போன்களை கழற்றிவிட்டு, காதிற்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து, பின்னர் பயன்படுத்துவது இன்னும் சிறந்ததாக இருக்கும்.
இந்த டிப்ஸ்கள் அனைவருக்கும் தெரிந்த சின்ன சின்ன விஷயம் தான். ஆனாலும் இதை அதிகம் யாரும் பயன்படுத்துவதில்லை.
இந்த குட்டி குட்டி தகவல்களை பின்பற்றுவதால், எலக்ட்ரானிக் சாதனத்தினை சிறப்பாக பயன்படுத்தும் முறையினையும் தெரிந்து கொள்ளமுடியும். அதே சமயம் காது போன்ற உடல் பகுதிகளை பாதுகாத்து கொள்ளவும் முடியும்.
Thankyou...
Tags
பயனுள்ள தகவல்