பித்ராவும் நம்முடைய பங்கும் !


பித்ரா என்பது புனித ரமழானை அடைந்த நாம் அதிகமாக நல்ல அமல்களை செய்வது மட்டுமல்லாது இறுதியில் நோன்பு பெருநாளை முன்னிட்டு ஏழை எளியோருக்கு தர்மம் செய்தலாகும்.

பித்ராவின் நோக்கம்:-

இரண்டு காரணங்களுக்காக பித்ரா எனும் தர்மம கடைமையக்கப்பட்டுளது.

1. ஏழைகளும் புனித நோன்பு பெருநாளை கொண்டாட வேண்டும், 
2. நோன்பில் ஏற்ப்பட்ட சிறு தவறுகளுக்கு பரிகாரமாக இது அமைகிறது.


எப்படி கொடுப்பது:-

நம் இல்லங்களில் ஊர்களில் அதிகமாக அரிசி - யை கொடுப்பது வழக்கம் ஆனால் அத்துடன் அன்றய பெருநாள் அன்று உணவிற்கு தேவைப்படும் உணவு பொருட்களையும் கொடுப்பது சிறந்தது.
அத்தோடு இதனை கூட்டாக சேகரித்து விநியோகம் செய்வது நபிகளாரின் வழிமுறையாகும்.

குறிப்பு :- 

செந்தலைப்பட்டிணம் பொதுநல சங்கம் சார்பாக கடந்த இரண்டு வருடங்களாக பித்ரா தொகை வசூல் செய்யப்பட்டு ஏழை எழிய உள்ளுர் மற்றும் வெளியூர் மக்களுக்கு அதிகமான உணவுப்பொருட்களுடன் பித்ரா வழங்கப்பட்டது.

கடந்த 2016-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீடுகள் உள்ளூர் 50 வெளியூர் 25

கடந்த 2017-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீடுகள் உள்ளூர் 60 வெளியூர் 30

நம் சகோதர்களும் நம்மைபோல் பெருநாளை கொண்டாட நம்முடைய பித்ராவை வழங்கிடுவோம்,

வெளியூர் நண்பர்கள் பித்ராவை பொதுநல சங்கம் மூலமாக வழங்கநினைத்தால் தொடர்பு கொள்ளவும். 
செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கம்,

Post a Comment

Previous Post Next Post