நோன்பை முறிக்கும் செயல்கள்!!


புனித ரமலான் மாதம் துவங்க இருக்கிறது உலக முஸ்லீம்கள் நோன்பு வைக்க தயாராகிவருகிறார்கள். நோன்பு வைப்பவர்களுக்கு என்னவெல்லாம் செய்தால் நோன்பு முறியும் என்ற சந்தேகங்கள் இருக்கலாம்.

உங்களுக்காக சில தகவல்கள் இதோ..

ஒருவர் நோன்பிருக்கும் காலத்தில் ஏற்படும் சில எதிர்பாராத விஷயங்களும், தீய பழக்க வழக்கங்களும் நோன்பை முறிக்கும் ஆற்றல் பெற்றவை.
அவற்றை சரியாக உணர்ந்து நோன்பை நல்ல முறையில் நோற்க வேண்டியது கடமையாகிறது.

அதாவது, புகைப் பிடிப்பது. புகைப்பிடிப்பது உடலுக்கு பயன்தராது என்றாலும் அவற்றால் நோன்பு முறிந்துவிடும்.

முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றை ஒருவ‌ர் காம நோ‌க்க‌த்துட‌ன் செய்வாரேயானால் அவர்களது நோன்பு முறிந்துவிடும். 
ஆனால், தூக்கத்தில் ஒருவரது இந்திரியம் தானாகவே வெளியேறினால் நோன்பு முறியாது.

உணவைப் போன்று உடலுக்கு சக்தி அளிக்கும் மருந்துகளையோ, குளுக்கோஸ் போன்றவற்றையோ உடலுக்குள் செலுத்தினால் நோன்பு முறிந்துவிடும்.

பெண்களுக்கு மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வெளியேறினால் நோன்பு முறிந்துவிடும்.
வேண்டுமென்றே வாந்தி எடுப்பதால் நோன்பு முறிந்து விடும். அதே சமயம், தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது.

நோன்பு வைத்துக் கொண்டு நீரில் முங்கி குளிப்பதால் வாய், மூக்கு போன்ற ஓட்டைகளில் தண்ணீர் செல்லுபடி ஆகுவது.

இதுபோன்று நோன்பை முறிக்கும் செயல்கள் ஏற்பட்டுவிட்டால், உடனடியாக நோன்பை முடித்துக் கொண்டு பின்னர் இந்த நோன்பை தொடர வேண்டும்.

நோன்பின் பலனை கெடுக்கும் காரியங்கள்:

1. பொய் சொல்வது
2. புறம் பேசுவது.
3. கோள் சொல்வது
4. இட்டுக் கட்டுவது.
5. பொய் சாட்சி சொல்வது.
6. பிறரை ஏசுவது.
7. அதிக நேரம் தூங்குவது.
8. TV பார்ப்பது.

Post a Comment

Previous Post Next Post