* பச்சை மிளகாய் கெடாமல் இருக்க!
பச்சை மிளகாய் ஒரு மாதத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகித கவரில் சிறிது துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை காம்புகளை நீக்கி அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்,
* பப்பாளி விரைவில் அழுகாமல் இருக்க!
பப்பாளி பழத்தின் காம்பு பகுதி தரையை நோக்கி இருக்குமாறு வைத்தால் பழம் விரைவில் அழுகாது,
* பாகற்காய் கசப்பு நீங்க !
பாகற்காய் கசப்பு நீங்க அரிசி கலைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வைத்தால் கசப்பு நீங்கும்,
* கறிவேப்பிலை வாடாமல் இருக்க!
கறிவேப்பிலையை வாழை இலையால் மூடி வைத்தால் சீக்கிரம் வாடாமல் இருக்கும்,
* மண் பாத்திரம் பயன்படுத்துங்கள்: -
மண்பாத்திரத்தில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் மெதுவாக ஒரே சீராகப் பரவுகிறது. மேலும் மண்பாத்திரங்களில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவியும் காற்றும் உணவில் ஊடுருவி சரியான முறையில் சமைக்க உதவுகின்றன. இதனால் உணவுகள் பல மணி நேரம் கெடாமல் இருக்கும்.
மண் பாத்திரத்தில் சமைக்கும் போது அதிக எண்ணெய் பயன்படுத்த தேவைஇல்லை.
மண் பாத்திரத்திரங்களை சமைத்து முடித்த பின் அவ்வப்போது கழுவி வெயிலில் காயவைத்து மீண்டும் பயன்படுத்துவது நல்லது.
Tags
சமயல் குறிப்புகள் .