பெரும்பாலான இளைஞர்கள் சுயஇன்பம் காண்கிறார்கள் ஆனால் யாரும் அதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில்லை. சுயஇன்பம் காண்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தாலும் அவர்களுக்குள் இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற அச்சம் இல்லாமல் இல்லை. குறிப்பாக ஆண்களிடம் இந்தபயம் அதிகளவில் உள்ளது. சிலசமயம் ஆண்களும், பெண்களும் சுயஇன்பத்தின் போது மூச்சுத்திணறல் ஏற்படுவதாக கூறியுள்ளனர். மருத்துவ நிபுணர்களின் கருதுப்படி சுயஇன்பம் காண்பது பாலியல் ஆரோக்கியம் மட்டுமின்றி உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் எந்தவித எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தாது. மேலும் சுயஇன்பம் கலோரிகளை எரிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
PLOS One-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி, பாலியல் செயல்பாடுகளின் போது ஆற்றல் இழப்பு ஆண்களில் 101 கிலோகலோரி மற்றும் பெண்களில் 69.1 கிலோகலோரி ஆகும். 30 நிமிடங்களுக்கு மிதமான தீவிரம் கொண்ட ஒரு வொர்க்அவுட்டுடன் ஒப்பிடுகையில், இது ஆண்களில் 276 கிலோகலோரி மற்றும் பெண்களில் 213 கிலோகலோரி என தெரியவந்தது. உடலுறவு சுமார் 101 கலோரிகளை எரித்தால், சுயஇன்பத்தின் போது எரிக்கப்படும் கலோரிகள் இயற்கையாகவே குறைவாக இருக்கும், ஏனெனில் இது முழு உடல் இயக்கங்களையும் உள்ளடக்குவதில்லை. சுயஇன்பத்தின் போது, நீங்கள் படுத்துக் கொண்டு உங்கள் கையைப் மட்டுமே பயன்படுத்துகிறீர்கள்
இது கலோரிகளை எரிக்கிறதா?
சுயஇன்பம் உண்மையில் உடல்ரீதியாக தீவிரமான செயல்பாடு அல்ல. கலோரிகளை எரிக்க, நீங்கள் சரியான கார்டியோ இயக்கத்தில் ஈடுபட வேண்டும், அது உங்கள் இதயத் துடிப்பை நீண்ட காலத்திற்கு அதிகரிக்கும். உச்சக்கட்டம் கூட உங்கள் இதயத் துடிப்பை கொழுப்பை எரிக்கத் தொடங்கும் விதத்தில் உயர்த்தாது. கலோரிகளை எரிக்க சுயஇன்பம் உங்களுக்கு உதவவில்லை என்பதால் சுயஇன்பம் காண்பதை நிறுத்த வேண்டுமா? நிச்சயமாக இல்லை என்றுதான் கூறவேண்டும். சுய இன்பத்தில் ஈடுபடுவது உடலில் எண்டோர்பின்ஸ் அல்லது மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடுகிறது மற்றும் சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கிறது.
சுயஇன்பம் செய்யலாமா?
சுயஇன்பத்தின் நிரூபிக்கப்பட்ட பக்க விளைவுகள் எதுவும் இல்லை. மக்கள் தங்கள் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டால் மற்றும் அதற்கு அடிமையாகும்போதுதான் இது ஆபத்தானதாக மாறும். சுயஇன்பத்திற்கு அடிமையாவது உறவுகளை அழிக்கக்கூடும், மேலும் ஒருவரை சமூகரீதியாக சங்கடமாகவும் மாற்றச்செய்யும். சுயஇன்பம் செய்யும் போது நீங்கள் பாலியல் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் அந்தரங்கங்களைத் தொடும் முன் கைகளைக் கழுவுங்கள். உயவு எண்ணெய்களை பயன்படுத்துவதற்கு வெட்கப்பட வேண்டாம், நீங்கள் உலர்ந்திருந்தால் அது வசதியாக இருக்கும்.
உடலுறவு மற்றும் சுயஇன்பம் எதுவாக இருந்தாலும் அதில் G ஸ்பாட் என்பது முக்கியமானதாகும். நீங்கள் இதில் தொடக்க நிலையில் இருந்தால் அதனை கண்டறிய உங்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். ஒருவரின் G- ஸ்பாட்டை எவ்வாறு தூண்டுவது என்பதைப் புரிந்துகொள்ள நேரம் எடுக்கலாம்.