சக்கரை நோயாளிகளே ! பாதிப்பு எதுவுமின்றி நோயை குறைக்க வேண்டுமா ? இத யூஸ் பண்ணி பாருங்க !


உடல் நலப்பிரச்சனைகளில் தற்போது முதன்மையானதாக இருப்பது சர்க்கரை நோய் தான். ஏனென்றால் நாம் அதனை கவனிக்க வில்லை என்றால் உயிர் போக்கூடிய அளவுக்கும் உடலை உருக்குலைத்திடும் குணம் அதற்கு உண்டு. சர்க்கரை வியாதி என்பது கணையம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும்.

உடலில் உள்ள கணையம் என்னும் பகுதி இன்சுலினை சுரக்க வைக்கின்றது. இந்த இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்பட்டால் சர்க்கரை வியாதி ஏற்படும். சர்க்கரைநோய் குறைபாட்டால் பெண்களைவிட ஆண்களே பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் , பெண்களில் அதிகமானவர்களுக்கு இன்சுலின் குறைபாடு இருக்கிறது. இதனை ஆரம்பத்திலேயே சரி செய்வது மிகவும் சிறந்ததாகும். இல்லாவிடின் பின்னடைவில் பாரிய பிரச்சினையை உருவாக்கி விடுகின்றது.

அந்தவகையில் இதிலிருந்து விடுபட வேண்டுமாயின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை பொடிகளை தினமும் சேர்த்து கொண்டாலே போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

* கருஞ்சீரகத்தை இலேசாக வாசம் போக அரைத்து வைத்துகொண்டு, அதை வெதுவெதுப்பான நீரில் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் கட்டுப்படாத ரத்த சர்க்கரை அளவு பெருமளவு குறையும். இதை எடுத்துகொள்வதற்கு முன்பு ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை செய்வது அவசியம். பிறகும் இதை தொடர்ந்து சாப்பிடாமல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு ஒரு மாத இடைவெளியில் மீண்டும் சர்க்கரை பரிசோதனை செய்யவேண்டும்.

* வெந்தயத்தை இலேசாக வறுத்து பொடித்து வைத்து தினமும் காலையில் வெந்தய டீயாக குடித்துவரலாம். கசப்பு சுவை இருக்கும் என்றாலும் தினமும் ஒரு கப் அளவு குடித்துவந்தால் போதுமானது. வெந்தயத்தை முளைகட்டியும் தினம் ஒரு டீஸ்பூன் வீதம் எடுத்துகொள்ளலாம். சர்க்கரையை விரைவில் கட்டுக்குள் கொண்டுவர உதவும்.

* சர்க்கரை நோய் இருப்பவர்கள் வாரத்துக்கு மூன்று அல்லது இரண்டு முறையாவது பாகற்காய் எடுத்துகொள்ள வேண்டும். பாகற்காயை வட்டவடிவில் நறுக்கி நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துகொண்டு அதை சூப் செய்ய பயன்படுத்தலாம். இதை மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடித்துவந்தால் போதும். சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

* நாவல் பழத்தின் கொட்டையை எடுத்து நிழலில் உலர்த்தி நன்றாக பொடித்து வைத்து கொள்ளவும். தினமும் ஒரு கிராம் அளவு இந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்திருப்பதை அறியலாம். வெறும் வயிற்றில் சாப்பிடாமல் ஒரு டம்ளர் தண்ணீர்குடித்த பிறகு இதை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

* முருங்கை இலைகள், கருந்துளசி, மாமர இலையில் இருக்க கூடிய மாந்தளிர் இந்த மூன்றையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடித்து வைக்கவும். பிறகு தினமும் காலையில் அரை டீஸ்பூன் அளவு பொடியை ஒரு டம்ளர் நீரில் சேர்த்து அவை பாதியாக வரும் வரை சுண்ட வைத்து பொறுமையாக குடிக்க வேண்டும். தினமும் இதை குடித்துவந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரக்கூடும்.

Source form news.lankasri.com

Post a Comment

Previous Post Next Post