இயற்கையாக கிடைக்கும் பதநீரில் உள்ள மருத்துவ நன்மைகள்!


பதநீர் பனை மரத்திலிருந்து கிடைக்கின்ற பானம். பனை மரங்களில் பாளைகளைச் சீவி, நுனியில் வடியும் நீரைச் சுண்ணாம்பு தடவிய பானைகள் மூலம் சேகரிப்பார்கள். இனிப்புச் சுவையுடன் கூடிய இந்தத் திரவமே பதநீர்.

பதநீர் நார் சத்து மிகுந்திருப்பதால் பெண்களின் பேரு காலத்திற்குப்பின் உண்டாகும் மலச்சிக்கலை நீக்குகிறது. இதயத்தை வலுப்படுத்துகிறது. இதில் உள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளை வலுபடுத்துகிறது.
பதநீரில் இயல்பாகவே அனைத்து சத்துக்களும் நிரம்பி இருப்பதால் பாலுணர்வை கூட்டுகிறது என்கிற மருத்துவக்குறிப்புகளும் காண கிடைக்கிறது. 


சித்த மருத்துவம் என்பது வரட்டுத்தனமான கோட்பாடுகளை கொண்டிருக்கவில்லை இதில் முறையான அறிவியல் ஆய்வுகள்  கொட்டிகிடப்பதால் நம் மக்கள் விழித்தெழுந்து நம் சித்த மருத்துவத்தை மீட்டு பயன்படுத்திடவேண்டும்.

வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர  இரத்த கடுப்பு .மூல சூடு தணியும்.

அதேபோல மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி  உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண், வெப்ப கழிச்சல், சீத கழிச்சல் நீங்கும்.

பெண்கள் பலரும், மாதவிடாய் தடைபட்டு அதனால் கருப்பை சார்ந்த வலி, வாய்வு, கட்டி முதலியவற்றினால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் பனை குருத்தின் உள்பகுதியை உட்கொண்டால் மாதவிடாய் சிக்கலின்றி வெளியேறி நோயை நீக்கும்.


பதநீரை, பழைய கஞ்சியுடன் சேர்த்துப் புளிக்க வைத்து ஆறாத புண்கள், கொப்புளங்கள் மீது தடவிவந்தால் குணம் கிடைக்கும்.

சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால், இதில் உடம்புக்குத் தேவையான கால்சியம் கிடைக்கிறது. எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல்  பாதுகாக்கும் ஆற்றல் பதநீருக்கு உண்டு.

Post a Comment

Previous Post Next Post