அலங்காரப் பொருள்களை வைப்பதற்காக வரவேற்பு அறைகளின் மூலைகளில் பயன்படுத்துவது சமீபத்திய ட்ரெண்டாக மாறியிருக்கிறது.
இப்போதைய வீடுகள் ஒவ்வொன்றிலும் அவ்வளவு அசுத்தங்கள் நிறைந்ததாகத்தான் வீட்டு மூலைகள் இருக்கின்றன. ஆனால், உண்மையிலேயே வீட்டுக்கு அழகு சேர்க்கும் இடங்களில் பால்கனிகளைப் போல, வீட்டு மூலைகளுக்குப் பெரும்பங்கு இருக்கிறது என்கின்றனர் இன்டீரியர் டிசைனர்கள்.
வீட்டின் எந்த அறைகளாக இருந்தாலும் சுவர்களுக்கு நடுவில்தான் ஜன்னல்கள் இருக்கும். ஆனால் அறையின் மூலையில், இரு சுவர்கள் சேரும் இடத்தில் கண்ணாடி ஜன்னல்கள் அமைப்பதுதான் சமீபத்திய ட்ரெண்ட்.
விவரம் அறிந்தவர்கள், வீடுகளைக் கட்டும்போதே வீட்டுமூலைகளில் தனிக் கவனம் செலுத்தி, நேர்த்தியான அழகுடன் அமைத்துவிடுகின்றனர். அப்படி கட்டாமல் விட்டவர்களுக்கு பல அலங்காரப் பொருள்கள் ஹோம் டெக்கார் கடைகளில் கிடைக்கின்றன.
கோணல் மாணலான மூலையாக இருந்தாலும்கூட அதை அழகுபடுத்துவதற்காக பல்வேறு அலங்காரப் பொருள்கள் இன்று கிடைக்கின்றன. கட்டும்போது அறைகளின் மூலைகளின் மீது கவனம் செலுத்தவில்லை என்றாலும், இதுபோன்ற பொருள்களை வாங்கிப் பொருத்திக் கொள்வதன் மூலம் அறைகளுக்கு அழகு சேர்க்கலாம்.
Tags
நம்ம வீடு