விந்து முந்துதல் பிரச்சனையா? தடுக்க சிறந்த வழி..


நூறு அண்களில் பத்து என்ற விகிதத்தில் மிகப் பரவலாக ஆண்களைப் பாதிக்கப்படும் நோய் விந்து முந்துதல்தான்.

விந்து முந்துதலை ஆங்கிலத்தில் பிரி மெச்யூர் எஜாக்குலேஷன் என்பர். இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும்.
உறவின் போது பெண் தனது உணர்வின் உச்ச கட்டத்தை எய்துவ தற்கு முன்னரே ஆணுக்கு உணர்வின் உச்ச கட்டம் எட்டி விந்து வெளியேறிவிடுவது விந்து முந்துதல் என கூறப்படுகிறது.

பொதுவாக இது இளமைப் பருவத்தில் அதிகம் ஏற்படுகிறது. பாலியல் உணர்வுகள் அதிகமாகவும் தீவிரமாகவும் இருக்கும் பருவத்தில் பலரையும் பாதிக்கிறது.காலம் செல்லச் செல்ல, வயது முதிர முதிர தங்கள் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டுவர ஆண்களால் முடிகிறது.

விந்து முந்துவதாகக் கருதும் ஆண்களுக்கு சராசரியாக 1.8 நிமிடங் களில் வெளியேறியது.
எவ்வித பிரச்னையும் இல்லாத ஆண்களால் 7.3 நிமிடங்கள் உறவு கொள்ள முடியும்.

இப்பிரச்னை வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு அளவுகோல்கள் இருக்கும்.
ஆனால் 20 நிமிடங்களுக்குக் குறைவான நேரம் மட்டுமே நீடிக்கும் உடலுறவைப் பெரும்பாலான தம்பதிகள் திருப்பதியற்றதாகக் கருதுகிறார்கள். 

பலவற்றையும் கருத்தில் எடுக்கும் போது 10 நிமிட நேரத்திற்குள் விந்து வெளியேறிவிடுவதை விந்து முந்துதல் எனப் பெரும்பாலான மரு த்துவர்கள் கருதுகிறார்கள்.


தடுப்பதற்கான வழி.

* பதற்றமான சூழ்நிலைகளில் பயத்துடனும் அவசர அவசரமாகவும் உறவு கொண்டவர்களின் ஆரம்பகால அனுபவங்களின் தொடர்ச்சியாக இது நேர்ந்திருக்கலாம்.

* உடலுறவு என்பது உணர்வுகளோடு தொடர்புடையது. மனக்கிளர்ச்சி அதற்கு அவசியம். சஞ்சலமும், கவலையும் விந்து முந்துதலை ஏற்படுத்தக் கூடும்.
மனத்தைத் திருப்ப முயற்சியுங்கள். விந்து முந்திவிடுமா என அஞ் சிக் கொண்டிராமல் மனத்தை முற்றிலும் வேறு ஒரு விடய த்தினால் செலுத்தினால் வி ரைவாக வெளியேறுவதைத் தடுக்கலாம்.

* ‘லாங் லவ்’ எனப் பெயரிடப்பட்ட ஆணுறை மேல்நாடுகளில் அறிமுகப்பத்தப் பட்டுள்ளது. இதனால் உறுப்பை மரக்கச் செய்யும் மருந்துகளை பூச வேண்டிய தேவையில்லாமல், ஆணுறையில் உட்புறமாக இதனை கலந்திருக்கிறார்கள். இதனை அணிவதால் விந்து வருவது தாமதப்படும்.

* புகை, மது உள்ளிட்டாவற்றை தவிர்ப்பது, சத்தான காய்கறி, பழங்கள், தானியங்கள் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது உறவு நேரத்தை நீடிக்க உதவும் இயற்கை வழிகளாகும்.

Post a Comment

Previous Post Next Post