பொடுகுகள் இருந்தால் தலையில் அரிப்பு ஏற்படும். அதனால் தொடர்ச்சியாக தலையை சொரியும் போது எண்ணைச் சுரப்பிக் கொப்புளம் உண்டாகும். இயற்கை முறையில் பொடுகினை ஒழிக்க முற்படுவதே, சிறந்த வழி. இதனால் பொடுகு நீங்குவதோடு, கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக பொலிவோடு காணப்படும்.
* தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்சனை நீங்கும்.
* வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகு தொல்லை நீங்கும்.
* தயிர் முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.
* தலைக்கு குளிக்கும்போது கடைசியாக குளிக்கும் தண்ணீரில் வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும்.
* தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.
* மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.
* வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.
* குளிக்க போகும் முன், தலை சருமத்தில் எலுமிச்சை ஜூசை வைத்து நன்கு மசாஜ் செய்து, 15-20 நிமிடங்களுக்கு பின் தலையை தண்ணீரில் அலசுங்கள். இந்த சிகிச்சை முடியின் பசைத் தன்மையை குறைத்து, பொடுகை ஒழித்து, கூந்தலை ஜொலிக்க செய்யும்.
* சிறிது வெங்காய விழுதை தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து, பின் தலையை நன்றாக கழுவி, இறுதியில் சிறிது எலுமிச்சை சாற்றை தலையில் தேய்த்து நீரில் அலசினால், வெங்காய வாடை தலையை விட்டு நீங்கும், அத்துடன் பொடுகும் நீங்கிவிடும்.
Tags
உடல்நலம்