ரிலாக்ஸ் செய்ய கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க...


நண்பர் - 1: தொட்டதக்கெல்லாம் என் மனைவி கோவிச்சுகுரா...
நண்பர் - 2: அப்படி நீ என்னத்த தொட்ட?
நண்பர் - 1: அவளோட தங்கச்சியைத்தான்....
நண்பர் - 2: ?!?.............. 

_______________


டாக்டர்: "நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக்
குறைக்கணும்; காரத்தைக் குறைக்கணும்"

நோயாளி: "டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்" 

_________________


பாய்: இன்னிக்கு நைட் நாம ஊர விட்டு ஓடிப் பொய் விடலாம்...
கேர்ள்: எனக்கு தனியா வர பயமா இருக்கு....
பாய்: அப்ப உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா...
கேர்ள்: ?!?.... 

_______________

கேர்ள்: எக்ஸாம் டைம்'ல நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்...
பாய்: இவ்வளவு தானா? நாங்க புக்கையே தொட மாட்டோம். 

________________

பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை."

வீட்டுக்காரம்மா: " பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
எனக்கு காது கேட்காது." 

_________________

தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?"
"மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!" 

_________________

காதலன்: ஒரே ஒரு முத்தம் கொடு....
காதலி: கல்யாணத்துக்கு அப்புறம்தான் நீங்க என்னத் தொட முடியும்...
காதலன்: சரி... கல்யாணம் முடிந்ததும் மறக்காம எனக்கு சொல்லி அனுப்பு....
காதலி: ?!?........

________________

நான் பாடம் நடத்தும்போது அவன் ஏன்டா வெளியில போறான்...?"
"அவனுக்குத் தூக்கத்துல நடக்கற வியாதி இருக்கு சார்...!"

_________________

மகன் : கஞ்சன் அப்படின்னா என்னப்பா?
தந்தை : கண்ணிலே காசையே காட்டாதவந்தாண்டா கஞ்சன்
மகன் : காசுன்னா என்னப்பா???!

_________________

டார்லிங்! நம்ம மேரேஜ் இப்ப வேணாம். ஆடி போய் ஆவணி வந்தா…நான் ‘டாப்’பா வந்துருவேன்!
ம்ஹூம்..அதுக்குள்ளே நமக்கு ‘பாப்பா’ வந்திடும் டியர்…!

_________________

தூங்கறதுக்கு முன்னால எல்லாரும் என்ன செய்வாங்க ?
என்ன செய்வாங்க ?



முழிச்சிருப்பாங்க===

__________________

டாக்டர் கல்யாணமாகி எட்டு வருஷமாகியும் என் மனைவி வயத்துல ஒரு புழு பூச்சிகூட இல்லை.

டாக்டர் :வெரிகுட். நல்ல ஆரோக்கியமான உடம்புனு சொல்லுங்க. 

_________________

ரொம்ப சிரமமா இருக்கு டாக்டர்..."
"எது?"
"நர்ஸை சிஸ்டர்னு கூப்பிடுறது...!"

__________________

முடியாது முடியாது..
சில விஷயத்தை மாத்த முடியாது
காலிஃப்ளவர் தலைக்கு
வைக்க முடியாது.
கவரிங் கோல்டு அடகு
வைக்க முடியாது.
கோல மாவில்
தோசை சுட முடியாது.
வீணாப் போன குறுஞ்செய்தி
வந்தாலும்
உன்னால படிக்காம இருக்க முடியாது.........

Post a Comment

Previous Post Next Post