நிபா வைரஸ் என்றால் என்ன ? என்ன அறிகுறி வெளியில் தெரியும்?


நிபா வைரஸ் என்றால் என்ன? அதை தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

1998 ல் மலேசியாவில் பன்றி வளர்க்கும் தொழிலில் இருப்பவர்களுக்கிடையே காணப்பட்டது தான் இந்த நிபா வைரஸ். அதன் பின்பு பல வருடங்களுக்கு பிறகு இந்த நிபா வைரஸ் கேரளாவை தாக்கியது. கேரளாவில் எர்னா குளம் பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் இந்த நிபா வைரஸால் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளார். இந்த நிபா வைரஸால் கிட்டத்தட்ட 86 பேர்கள் இந்த நோயால் பாதிப்படைந்து உள்ளனர்.

நிபா வைரஸ் என்றால் என்ன? 

உலக சுகாதார நிறுவனம் கருத்துப் படி நிபா வைரஸ் வைரஸ் தொற்றை ஏற்படுத்தக் கூடியது. இது ஒரு ஷூனிஸ் வகையை சார்ந்தது. அதாவது இந்த வைரஸ் மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளையும் தாக்க கூடியது. இது விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவக் கூடியது. அதே மாதிரி நம்மிடமிருந்து மற்றவருக்கு பரவக் கூடியது. உலக சுகாதார நிறுவனம் கருத்துப் படி இந்த நிபா வைரஸ் பாராமிக்ஸோவிரிடே' (Paramyxoviridae) என்ற குடும்பத்தைச் சேர்ந்தது.


பரவும் விதம்: 

இந்த நிபா வைரஸ் வெளவால்களில் வழியாக பரவக் கூடியது. முதலில் பன்றிகளிலிருந்து தான் மனிதர்களுக்கு பரவியது. அப்படியே மனிதர்களிடம் இருந்து மற்றவர்களுக்கும் பரவக் கூடும். பழங்களில், அதன் கொட்டைகளில் படும் வெளவால்களின் எச்சங்கள் தான் பரவுதலுக்கு மூலகாரணமாக அமைகிறது. அதே மாதிரி பன்றி, நாய், ஆடு இவற்றுடன் நேரடி தொடர்பின் மூலமும் பரவுகிறது. 

2001 ஆம் ஆண்டு மட்டும் இந்த நிபா வைரஸால் 75% மக்கள் இந்த நிபா வைரஸால் பாதிப்படைந்து இருந்தனர். மருத்துவ மனைகள், மீடியாக்கள் முழுவதும் இது குறித்த செய்தியாகாத்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிகுறிகள்: 

நிபா வைரஸ் நம்மளை தாக்கி இருந்தால் கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்படும்
 காய்ச்சல் 
தலைவலி 
தொண்டை புண் 
வாந்தி 
தூக்கமின்மை 
சோர்வு மயக்கம் 
தீராத சுவாசக் கோளாறுகள்

போன்ற அறிகுறிகள் தென்படும்.இதுமட்டுமல்லாமல் மனிதர்களுக்கு பாதிப்புகள் சுவாச நோயிலிருந்து மூளையில் அழற்சி ஏற்படும் வரை ஏற்படுகிறது. சில பேருக்கு தீவிர சுவாசப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ரொம்ப பாதிப்பு இருந்தால் மூளையழற்சி மற்றும் வலிப்பு கூட ஏற்படலாம். 24-48 மணி நேரத்தில் கோமா நிலைக்கு செல்ல நேரிடலாம். அறிகுறிகள் தென்பட 5-14 நாட்களாவது ஆகும். பாதிப்புகள் அதிகமாக இருக்கும் போது 45 நாட்களுக்கு செயற்கை சுவாசம் கொடுக்க நேரிடலாம். 20%.பேர்களுக்கு வலிப்பு, நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று உல் சுகாதார நிறுவனம் கூறுகிறது.

நோயைக் கண்டறிதல் நிபா வைரஸ் தொற்றிய உடனே கண்டறிய இயலாது. அறிகுறிகள் தென்பட ஆரம்பித்த பிறகு கண்டறிய முடியும். அறிகுறிகள் ஆரம்ப நிலையில் இருக்கும் போதே கண்டறிந்து விட்டால் தடுப்பது எளிது. பாதிக்கப்பட்ட நபரின் இரத்த பரிசோதனை மூலம் இதை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

Post a Comment

Previous Post Next Post