வால்நட் தினமும் சாப்பிடுவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை பெருகும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இதற்கு காரணம் வால்நட்டில் உயர்தர ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன.
அதுவே ஆண்களின் உற்சாகத்தையும், விந்தணுவையும் அதிகரிக்கிறது. என்கின்றனர் ஆய்வாளர்கள். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டது. ஆண்மை குறைபாட்டினால் படுக்கை அறையில் சரியாக செயல்பட முடியாமல் இருந்த 21 வயது முதல் 30 வயது வரை உடைய ஆண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர், தினசரி 75 கிராம் அளவுள்ள வால்நட் அவர்களுக்கு சாப்பிட கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்குபின் அவர்களின் விந்தணுவை பரிசோதனை செய்தபோது குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் அவர்களின் உற்சாகமும், ஆண்மையும் அதிகரித்து இருந்தது தெரியவந்தது.
Tags
உடல் உறவு குறிப்பு