சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பெண்கள் கவனிக்க வேண்டியவை.!


பேஸ்புக் அல்லது மைஸ்பேஸ் அல்லது பொதுவாக எஸ்.என்.எஸ் போன்ற குறிப்பிட்ட எஸ்.என்.எஸ் களைப் பெண்கள் அதிகம் பயன்படுத்துவதாக பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

கடந்த 2015 ஆம் ஆண்டில், ஆன்லைனில் ஆண்கள் 73% மற்றும் ஆன்லைனில் பெண்கள் 80% சமூக வலைப்பின்னல் தளங்களைப் பயன்படுத்தினர். ... Pinterest, Facebook மற்றும் Instagram அதிக பெண்களை ஈர்க்கின்றன..

சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தும் பெண்கள் முதன்மையாக கவனிக்க வேண்டியது தங்களுடைய பாதுகாப்பை மட்டுமே.இந்த பாதுகாப்பு முக்கியத்துவம்தான் உங்களை பல சிக்கல்களிலிருந்து பாதுகாக்கும்.

பெண்கள் எப்போதுமே முகநூலில் அறிமுகமில்லாத புதிய நண்பர்களுடன் பழகும் முறையிலும் ,தகவல்கள் பரிமாறும் முறையிலும் அளவோடு இருந்துகொள்ள வேண்டும்.வரம்பு மீறினால் நீங்கள் மட்டுமல்லாது உங்கள் குடும்பமும் பல விளைவுகளை சந்திக்க நேரிடும்.


சமூக வலைத்தளங்களில் நீங்கள் ஒரு விடயத்தை பகிரும் போது ஒன்றுக்கு நிறைய தடவை சிந்தித்து பகிருங்கள்.நீங்கள் பதிவிடும் பதிவுகளை வைத்து உங்கள் மனநிலையை அறிந்து கொள்ள முடியும்.அத்தோடு அதற்கேற்ப மற்றவர்கள் உங்களுடன் புதிய அறிமுகமில்லாதவர்கள் நட்பு வைக்க முனைவார்கள்.
உங்கள் தொடர்பான சில ரகசியம் பேணத்தக்க விபரங்களை வலைத்தளங்களில் மற்றவர்கள் பார்வையிடும் வண்ணம் செயற்படாதீர்கள். 

பெண்கள் நீங்கள் முக்கியமாக புகைப்படங்களை பதிவிடும் போது உங்கள் ஆடைகளில் கவனம் செலுத்துங்கள்.இது உங்களுக்கும் உங்கள் எதிர்காலத்திற்கும் நன்மை தரும் குறிப்பிட்ட நேரம் வரை சமூக வலைத்தளங்களில் நேரம் செலவிட பழகிடுங்கள்.

Post a Comment

Previous Post Next Post