உங்களுக்கு பனங்கிழங்கு ரொம்ப பிடிக்குமா?... இத படிங்க..


பனை மரத்தின் எல்லா பாகங்களும் எதாவது ஒரு விதத்தில் நமக்கு நன்மைகளை அள்ளித் தருகிறது. அதன் பழங்கள், இலைகள், எண்ணெய் என்று இதன் பயன்களை அடுக்கி கொண்டே போகலாம்.
அப்படிப்பட்ட ஒன்று தான் பனை மரத்தின் இருதயப் பகுதி. இது ஒரு வெஜிடபிள் ஆக பயன்படுகிறது. ரொம்ப குழம்பாதீங்க... பனங்கிழங்கை தான் இப்படி சுத்தி வளைச்சு சொல்றேன்.

காணப்படும் இடங்கள்:-

முதன் முதலில் இது பிரேசில் போன்ற நாடுகளில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது இது அதிகமாக கோஸ்ட்டா ரிக்கா நாடுகளில் காணப்படுகிறது. ஆசியா நாடுகளிலும் இது பெருமளவு காணப்படுகிறது.

தோற்றம் பனை மரத்தின் இருதயப் பகுதி என்பது உள் பகுதியாகும். இதற்கு முதலில் தண்டின் வெளிப்பகுதியில் உள்ள நார்களை உரித்து விட்டு மென்மையான உட்பகுதி வரை உரிக்க வேண்டும். அந்த மென்மையான உட்பகுதி தான் அதன் இருதயப் பகுதி. இதன் சுவை கூனைப் பூக்கள் சுவை மாதிரி இருக்கும்.

ஆரோக்கியம் இதில் நிறைய விட்டமின்கள் மற்றும் மினிரல்கள் உள்ளன. கலோரி குறைந்த உணவு மற்றும் சோடியம், கொலஸ்ட்ரால் போன்றவைகளும் உள்ளன. இதை சாலட்டாக செய்தும் சாப்பிடலாம். மேலும் இதை சுடச்சுட சமைத்து சாதத்துடன் சைடிஸாக சாப்பிட்டும் மகிழலாம். ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்கக் கூடியது.

ஊட்டச்சத்து அளவுகள் இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. 

100 கிராம் பனை இருதயப் பகுதியில் : 115 கலோரிகள் 25.6 கிராம் கார்போஹைட்ரேட் 1.5 கிராம் நார்ச்சத்து 17.2 கிராம் சர்க்கரை 2.7 கிராம் புரோட்டீன் 0.2 கிராம் கொழுப்பு 13 மில்லி கிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் 76 மில்லி கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் 68 IU விட்டமின் ஏ 8 மில்லி கிராம் விட்டமின் சி 0.5 மில்லி கிராம் விட்டமின் ஈ 0.1 மில்லி கிராம் தயமின் 0.2 மில்லி கிராம் ரிபோப்ளவின் 0.9 மில்லி கிராம் நியாசின் 0.8 மில்லி கிராம் விட்டமின் பி6 24 மைக்ரோ கிராம் போலேட் 18 மில்லி கிராம் கால்சியம் 1.7 மில்லி கிராம் இரும்புச் சத்து 10 மில்லி கிராம் மக்னீசியம் 140 மில்லி கிராம் பாஸ்பரஸ் 1806 மில்லி கிராம் பொட்டாசியம் 14 மில்லி கிராம் சோடியம் 3.7 மில்லி கிராம் ஜிங்க் 0.6 மில்லி கிராம் காப்பர் 0.7 மைக்ரோ கிராம் செலினியம் 69.5 கிராம் தண்ணீர்.
ஆகிய சத்துக்கள் உள்ளன. 

إرسال تعليق

أحدث أقدم